சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
போர் பதற்றத்துக்கு மத்தியில் சேப்பாக்கம் மைதானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் என்பது அவ்வபோது வெளியாகும்ஒரு வதந்தியாக இருந்தாலும், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த மிரட்டல் TNCA-க்கு மெயில் வந்ததை அடுத்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதே போல டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாகிஸ்தானுடனான போர் பதற்றம் காரணமாக நேற்றைய போட்டி கைவிடப்பட்டது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், புது அட்டவணை ஒரு வாரத்திற்கு பிறகு வெளியிடப்படும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025