Tag: Operation Sindhoor

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில அரசுகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளன. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தானில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்முவில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, […]

#Attack 4 Min Read
schools shut

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 மாநிலங்களில் உச்ச கட்ட பரபரப்பு நிலவும் சூழலில், டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை என பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இதில் குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் F16 […]

DroneAttack 3 Min Read

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இந்நிலையில், தங்களின் இரண்டு JF17 வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில எல்லையோரம், டாங்கி படையை பாகிஸ்தான் குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அமைந்துள்ள நிலைகள் மீது பாகிஸ்தான் […]

DroneAttack 3 Min Read
Jammu and Kashmir

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான சத்வாரி கண்டோன்மென்ட்டில் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. சர்வதேச எல்லைக்கு அருகில் பல இடங்களில் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைதொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தைச் சுற்றி அவசரகால சைரன்கள் ஒலிக்க தொடங்கியது. தாக்குதல்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மொபைல் சேவைகளும் செயல்படவில்லை. ஆனால், இந்தியாவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை, இந்தியாவின் […]

#Attack 4 Min Read
India Pakistan Tensions