தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!
ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானத்தில் இருந்த பாகிஸ்தான் விமானி இந்திய ராணுவத்திடம் சிக்கியுள்ளார்.

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 மாநிலங்களில் உச்ச கட்ட பரபரப்பு நிலவும் சூழலில், டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை என பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும்.
இதில் குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் F16 போர் விமானத்திலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் விமானி இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். மேலும், ராஜஸ்தானின் ஜெய்சால்மரை குறி வைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலும் முறியடிக்கப்பட்டது.
முன்னதாக, ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், 8 ட்ரோன்களை எஸ் 400 சுதர்சன் சக்ரா இடைமறித்து வெற்றிகரமாக அளித்தது. இதனால், எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.