‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!
கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டன, மக்கள் பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர் மாவட்டத்தின் கீரங்குடி கிராமத்தில் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களுடன் குறுவை சாகுபடி குறித்து உரையாடிய எடப்பாடி பழனிசாமி, அங்கு விவசாயிகளின் தேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து, பொதுமக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ”’திருவாரூர் என்று சொன்னாலே, திருவாரூர் தேர் தான் நினைவுக்கு வரும். இந்த பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க இருப்பதாக சொன்னபோது, இந்த பகுதியின் பொன் விளையும் பூமியை பாதுகாக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோ
திமுகவிற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறது. திமுக செய்கின்ற அனைத்து தவறுகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உடந்தை. கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று திமுகவிடம் பணம் பெற்றதோ அன்றே அந்த கட்சிகளின் கதை முடிந்து விட்டது. மக்கள் பிரச்சனைகளுக்கு கொடி பிடித்து போராடக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இன்றைக்கு திமுகவிற்கு அடிமை சாசனங்கள் எழுதி கொடுத்து விட்டது.
கம்யூனிஸ்ட் கட்சிக்கென்று தனித்தன்மை இருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டால் உடனே கொடிப்பிடித்து போராடக்கூடிய கட்சி. என்றைக்கு திமுகவிடம் கைநீட்டி பணம் வாங்குனீர்களோ அன்றைக்கே கம்யூனிஸ்ட் கட்சி முடிந்துவிட்டது. பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை, தண்ணீர் வரவில்லை இதற்கெல்லாம் கம்யூனிஸ்ட் போராடவில்லை. குறை சொல்வதாக எண்ணி விடாதீர்கள் கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டு விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் சொல்கிறேன்.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025