வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: இங்கிலாந்து தேர்தல் முறையில் மாற்றம்.!
இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்கும் மசோதாவை விரைவில் சட்டமாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று (17) தெரிவித்துள்ளது.
அதன்படி, வாக்களிக்கும் உரிமை இருந்தாலும், தேர்தலில் போட்டியிட உரிமையில்லை. லாட்டரி வாங்கவும், மது அருந்தவும், திருமணம் செய்யவும், போருக்கு செல்லவும் அனுமதி இல்லை என அமைச்சர் பால் ஹால்மெஸ் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக, அதாவது 2029 ஆகஸ்ட் மாதத்திற்கு முன் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றில் உள்ள அனைத்து தேர்தல்களுக்கும் பொருந்தும்.
இந்த முடிவு, 16 மற்றும் 17 வயது இளைஞர்கள் வேலை செய்யவும், வரி செலுத்தவும், இராணுவத்தில் சேரவும் தகுதியுடையவர்கள் என்பதால், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
மேலும், இந்த மாற்றம் தேர்தல் பதிவு முறையை தானியங்கி மயமாக்குவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டைக்கு வங்கி அட்டைகளை ஏற்கும் வகையில் வாக்காளர் அடையாள விதிகளை விரிவாக்குவது போன்ற பிற தேர்தல் சீர்திருத்தங்களுடன் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இங்கிலாந்தின் ஜனநாயக அமைப்பை நவீனமயமாக்குவதற்கும், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும் உதவும் என அரசு கருதுகிறது.
இந்த அறிவிப்பு பலரால் வரவேற்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் ரிபார்ம் யுகே ஆகியவை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 16 வயது இளைஞர்கள் மது வாங்குதல், திருமணம் செய்தல் அல்லது தேர்தலில் நிற்க முடியாது என்பதால், வாக்களிக்கும் உரிமை வழங்குவது முரண்பாடாக உள்ளது என்று கன்சர்வேட்டிவ் கட்சி வாதிடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025