சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில், திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது பதவில், ”கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி […]
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் குறிப்பிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் அவரது பதிவில், ”எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் […]
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின் மூத்த தலைவர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு தனபால் போட்டியிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரண்டு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. தேமுதிகவிற்கு சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், சீட் கொடுக்கப்படவில்லை. அதே நேரம், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்று கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் 2025- […]
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை […]
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் வெடித்திருக்கிறது. ஏனென்றால், அரசியல் தலைவர்கள் பலரும் முதல்வர் சென்றது பற்றி விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். குறிப்பாக த.வெ.க தலைவர் […]
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், ”’நானும் டெல்லிக்கு […]
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. கூட்டணி அதிருப்தியில் இருக்கும் கட்சியின் மூத்த மற்றும் கடைநிலை நிர்வாகிகளிடம் ஈபிஎஸ் கருத்து கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நேற்றைய தினம் நள்ளிரவு, குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே உள்ள பாகிஸ்தான் இராணுவ நிலைகளில் இருந்து , […]
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,”நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதே திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். நீட்டை ஒழிப்பதாக பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது” என்று கூறினார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் பொய் வாக்குறுதி கொடுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்றே சொன்னோம். நாங்கள் ஏமாற்றி […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று அதே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இதனை அறிவித்தார். இதனையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்து பேசி […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார். இதனை திமுக கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், இப்போது தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்திருக்கிறார். அதன்படி, 2026 தேர்தல் களம் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையே […]
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஈடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், அதிமுக புறக்கணித்த நிலையில், பாஜகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. இந்த நிலையில், பாஜகவினர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் நீட்டுக்கு எதிரான கூட்டத்தை புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளனர் என்று அதிமுக நிலைப்பாடு […]
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதகமாக உள்ளது என்றும், இது சமூக நீதிக்கு எதிரானது என்றும் தமிழக அரசு குரல் எழுப்பி வருகிறது. 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முதல் கையெழுத்தை இடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 2021 செப்டம்பரில் சட்டமன்றத்தில் நீட் விலக்கு […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய ‘தியாகி யார்’ என்ற பேட்ஜை அதிமுகவினர் அணிந்து வந்தனர். இதுகுறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின், “நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி… முதல்வர் பதவிக்காக காலில் விழுந்ததும் ஏமாந்தாரே அந்த அம்மையார்தான் தியாகி” என்று பதிலடி கொடுத்தார். […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான பனிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூழலில், தற்போது அது மேலும் தீவிரமடைந்து வருகிறது. செங்கோட்டையன் தொடர்ந்து கட்சி கூட்டங்களை புறக்கணித்து வருவதும், தன்னிச்சையாக இத்தகைய பயணங்களை மேற்கொள்வதும் அதிமுகவில் உட்கட்சி பூசலை மேலும் தீவிரமாக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் […]
டெல்லி : டெல்லி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அவரை மாநிலங்களவை உறுப்பினர்களான தம்பிதுரை, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். இப்பயணத்தில் முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை பேசுவார்களா என எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது. அதன்படி, டெல்லியில் இன்று மாலை அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்ட பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கும். அதன் பின் அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படலாம். உடனடியாக அதை ஏற்கும்பட்சத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்திச் செல்வார். தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பலதடவை முயற்சி […]
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு என உடன்படிக்கை’ கையெழுத்தானதாக கூறியிருந்தார். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்லவில்லை என குறிப்பிட்டு இபிஎஸ் பேசியிருந்தார். அதனை இப்பொது இபிஎஸ் மறுத்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர் சந்திப்பில் கடந்த மக்களவைத் தேர்தல் […]
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன, இதுபோன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது வருத்தம் மற்றும் கண்டனத்திற்கு உரியது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதவிவில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம். சங்க […]
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது. இதை பார்த்து அதிமுக கலகலத்து போயுள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்த அவர், பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் […]
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது. அண்ணா பல்கலைகழக சம்பவம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்: யார் அந்த சார் என கேட்டால் எதற்கு பதற வேண்டும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுப்போம். சபாநாயகர்: ஏற்கெனவே இந்த […]