Tag: #AIADMK

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரைக்கு எதிராக ”புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பரப்புரை லோகோவை இபிஎஸ் வெளியிட்டார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு வரும் 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப்பயணத்தை இபிஎஸ் தொடங்குகிறார். நேற்று முன்தினம் (ஜூலை 3) […]

#ADMK 4 Min Read
EPS - admk

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 10 NSG கமாண்டோக்கள், 55 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், இதில், குண்டு துளைக்காத வாகனங்களும் அடங்கும். அண்மையில் இபிஎஸ்-க்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் இரு முறை கொலை மிரட்டல் விடுத்தது […]

#ADMK 3 Min Read
Edappadi Palaniswami - Z +

கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனியார் நாளிதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், ”2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் NDA கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். மேலும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் […]

#ADMK 3 Min Read
eps - bjp

“இபிஎஸ் தான் முதலமைச்சர்.., தவெகவை NDAவுக்குள் கொண்டுவர முயற்சி” – ராஜேந்திரபாலாஜி.!

சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக இபிஎஸ் வருவார், அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று அதிமுக திரும்ப திரும்ப கூறி வருகிறது. ஆனால் அமித்ஷாவோ, இபிஎஸ் முதல்வராக வருவார் என்று கூறாமல், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று குறிப்பிட்டுள்ளார். இது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘ NDA கூட்டணியை பொறுத்தவரையில் […]

#ADMK 4 Min Read
AIADMK - BJP

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தனியார் நாளிதல் ஒன்றிக்கு பேட்டியளித்த அவர், லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்றார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் பரப்புரை மூலம் ஓட்டுகளை திரட்டினால், நிச்சயம் NDA அரசு அமையும் என கூறினார். கூட்டணி ஆட்சி தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? […]

#AIADMK 4 Min Read
Amit Shah - EPS

அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வரும்..இபிஎஸ் பேச்சு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதே சமயம் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. ஏற்கனவே, அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டது. இப்படியான சூழலில், இன்று அரக்கோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  இன்னும் அதிமுகவில் கூட்டணிக்கு கட்சிகள் இணையலாம் என தெரிவித்துள்ளார். அரக்கோணம் எம்எல்ஏ ரவி […]

#AIADMK 4 Min Read
edappadi palanisamy admk

பழனிசாமி, அண்ணாமலை குறித்த பேச்சு: “அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம்” – வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா.!

சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் குறிப்பிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக  வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் அவரது பதிவில், ”எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் […]

#ADMK 5 Min Read
Aadhav Arjuna

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழிப் பேத்தியான டாக்டர் திவ்யபிரியா (வயது 28) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து மே 22, 2025 அன்று மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், கல்லாறு பத்தடி பாலம் அருகே நடந்தது. சீனிவாசனின்  பேத்தி திவ்யபிரியா, பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர். இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தனது காரில் சென்று […]

#Accident 4 Min Read
Dindigul Sreenivasan

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விசாகா கமிட்டி என்பது, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், விசாரணைகள் மேற்கொள்வதற்கும், தீர்வுகள் காணவும் அமைக்கப்படும் ஒரு குழு ஆகும். இந்த குழுவே பல கல்லூரிகளில் மற்றும் தொழில் நிறுவனங்களில் செயல்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது. அதன் வெளிப்பாடு தான் சென்னை பல் மருத்துவ கல்லூரியில் விசாகா கமிட்டி […]

#AIADMK 5 Min Read
EPS TamilNadu

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற 16-ம் ஆண்டு தமிழின குடிகள் எழுச்சி நாள் நிகழ்வில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் திமுகவை விமர்சனம் செய்து பல விஷயங்களை பேசினார். இது தொடர்பாக பேசிய அவர் ” திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். திமுகவின் அராஜகங்களுக்கு எல்லாம் மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டார்கள். திமுக ஆட்சியில் யாராலும் சுதந்திரமாக […]

#AIADMK 8 Min Read
v. k. sasikala

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை, மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பொறுப்பு அமைச்சர்களை நியமிப்பது, கட்சி வளர்ச்சி, செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு கொடுப்பது, இளைஞர்களை ஊக்குவிக்க முக்கிய பதவி வழங்குவது, தேர்தல் வியூகம், பொதுக்குழுவை நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிந்த பின் இந்த கூட்டத்தில், மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் […]

#AIADMK 5 Min Read
EPS - BJP

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக 7வது முறையும் ஆட்சியை கைப்பற்றும். இதுவரை திராவிட மாடல் ஆட்சியை கண்ட தமிழ்நாடு, 2026 தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.O-வை காணும்.” என பேசியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேச்சை விமர்சிக்கும் வகையில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவில் கள்ளச்சாராய […]

#AIADMK 9 Min Read
rs bharathi dmk

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஈடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், அதிமுக புறக்கணித்த நிலையில், பாஜகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. இந்த நிலையில், பாஜகவினர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் நீட்டுக்கு எதிரான கூட்டத்தை புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளனர் என்று அதிமுக நிலைப்பாடு […]

#ADMK 5 Min Read
mk stalin vs eps

எந்த காலத்திலும் மும்மொழிக் கொள்கையை எற்றுக் கொள்ள மாட்டோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இன்னும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். உதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவையில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” இரு மொழிகொள்கை […]

#AIADMK 7 Min Read
Tamilnadu Legislative Assembly CM speech

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என இருவருமே இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக கட்சிக்கும் உரிமை கோரி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என முறையிட்டு வருகிறார்கள். இந்த சூழலில் சென்னை உயா் நீதிமன்றத்தில் அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திண்டுக்கல் சூரியமூா்த்தி என்பவர் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் […]

#ADMK 5 Min Read
ADMK

“ஒரேநாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்” – இபிஎஸ் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன, இதுபோன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது வருத்தம் மற்றும் கண்டனத்திற்கு உரியது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதவிவில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம். சங்க […]

#AIADMK 5 Min Read
EPS - TNGovt

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது…என்கிட்ட அதுக்கு ரகசியம் இருக்கு – ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி அதிமுக குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்கிற வகையில் […]

#AIADMK 5 Min Read
O. Panneerselvam edappadi palanisamy

டங்ஸ்டன் திட்டம் ரத்து: ‘தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி’… அரசியல் தலைவர்கள் வரவேற்பு.!

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது மட்டும் இல்லாமல், இது மதுரை மக்களுக்கு கிடைத்த […]

#AIADMK 12 Min Read
Tungsten madurai

“மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்பு மற்றும் இப்பகுதியின் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களின் உணர்வுக்கும், […]

#AIADMK 4 Min Read
mk stalin

234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஈபிஎஸ்!

சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயுத்தமாகி வருகின்றனர். இந்த முறை நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. இத்தகவலை அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் S.P.வேலுமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். வரும் 31ம் தேதி கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்க […]

#ADMK 3 Min Read
ADMK - EPS