எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!
இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் 3 போர்விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இரண்டு JF17 விமானங்களும், ஒரு F16 விமானமும் அடங்கும். இந்நிலையில், தங்களின் இரண்டு JF17 வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில எல்லையோரம், டாங்கி படையை பாகிஸ்தான் குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அமைந்துள்ள நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து விமானம் மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. அவற்றை நம் ராணுவம் முழுமையாக முறியடித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா தனது பதிலடியை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் முக்கிய நகரங்களான லாகூர், சியால்கோட் மீது இந்தியா தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.