ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
தரம்ஷாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிறுத்தப்பட்டது.

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் மழை காரணமாக, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போட முடியமால் போனது.
வழக்கமாக தொடங்கப்படும் போட்டியை 7.30 மணிக்கு தொடங்க முடியவில்லை. மழை நின்ற பிறகு, 8.15 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து களமிறங்கிய, பஞ்சாப் அணி சீரான தொடக்கத்தை பெற்றுள்ளது. பிரப்சிம்ரன் மற்றும் பிரயன்ஷ் இடையேயான பார்ட்னர்ஷிப் 70 ரன்களுக்கு மேல் குவித்தது.
பிரியன்ஸ் ஆர்யாவுக்குப் பிறகு பிரப்சிம்ரன் சிங் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சிறந்த ஃபார்மில்இருந்தனர், மேலும் 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், போட்டி நன்றாக நடந்து கொண்டிருக்கையில், பஞ்சாப் – டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, 10.1 ஓவர்களில் பஞ்சாப் அணி 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி நிறுத்தம் தொழில்நுட்ப காரணங்களுக்காக போட்டி நிறுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. மேலும், மைதானத்தை விட்டு கிளம்புமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டியின் போது மின்விளக்குகளும் பழுதடைந்தன, ஆனால் பாதுகாப்பே முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அப்பகுதியில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மைதானத்தில் உள்ள மின் கோபுரங்களில் ஒன்று பழுதடைந்தது என்று ஆட்டம் கைவிடப்பட்டதற்கு பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
2014 முதல் பிளே ஆஃப் தகுதி பெறாத பஞ்சாப் அணிக்கு இந்த முறை எளிதாக தகுதி பெற இருந்த நிலையில் இது பேரிடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே, நேற்றைய தினம் கொல்கத்தா ஆட்டம் மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.