வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில அரசுகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளன.
அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தானில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்முவில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மற்றும் டார்ன் தரன் ஆகிய ஆறு எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
மேலும், பாரமுல்லா, குப்வாரா, துணைப்பிரிவு (குரேஸ்) மற்றும் ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பள்ளிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகமே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மூடப்படும்” என்று காஷ்மீர் பள்ளிக் கல்வி இயக்குநர் குலாம் நபி இட்டூ தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காம் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.