பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான சத்வாரி கண்டோன்மென்ட்டில் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. சர்வதேச எல்லைக்கு அருகில் பல இடங்களில் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைதொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தைச் சுற்றி அவசரகால சைரன்கள் ஒலிக்க தொடங்கியது. தாக்குதல்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மொபைல் சேவைகளும் செயல்படவில்லை. ஆனால், இந்தியாவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை, இந்தியாவின் […]
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, அனைத்து OTT தளங்களிலும் பாகிஸ்தான் தொடர்கள், பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தான் YouTube சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெட்ஃபிக்ஸ் முதல் அமேசான் பிரைம் வீடியோ வரை அனைத்து தளங்களும் பாகிஸ்தானின் படங்கள், வெப் சீரியல்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என்று மத்திய […]
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் (POJK) ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. 15 நாட்களுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானின் மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலை இந்தியா முறியடித்துள்ளது. மேலும், இந்தியாவின் […]
காஷ்மீர் : ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7, 2025 அன்று அதிகாலை 1:05 மணிக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் […]