போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

ஓடிடி தளங்களில் உள்ள பாகிஸ்தான் படங்கள், வெப் சீரிஸ்களை நீக்க இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Central government orders OTT platforms

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, அனைத்து OTT தளங்களிலும் பாகிஸ்தான் தொடர்கள், பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தான் YouTube சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நெட்ஃபிக்ஸ் முதல் அமேசான் பிரைம் வீடியோ வரை அனைத்து தளங்களும் பாகிஸ்தானின் படங்கள், வெப் சீரியல்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இது செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல், பார்வையாளர்கள் பாகிஸ்தான் பாடல்களையும் வலைத் தொடர்களையும் பார்க்க முடியாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்