சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!
மணலி பெர்ட்ரோ கெமிக்கல் நிறுவனத்திலும், எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலும் நேற்றைய தினத்தை தொடர்ந்து இன்றும் போர் ஒத்திகை நடைபெற்றது

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. அதன்படி, விமான நிலையம், மணலி சிபிசிஎல், எண்ணூர் துறைமுகத்தில் இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
இந்தியாவின் Operation Sindoor-க்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நேற்று நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்தியை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, நெற்று தமிழகத்தின் சென்னையில் துறைமுகம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாளாக சென்னையில் சைரன்கள் மூலம் மக்களை எச்சரிப்பது, பாதுகாப்பான பகுதிகளை தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆபத்து காலத்தில் எப்படி செயல்பட வேண்டுமென விளக்கம் அளிக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தி காட்டினர். போர்க்கால ஒத்திகை குறித்து மக்கள் பதற்றமோ, அச்சமோ கொள்ளத் தேவை இல்லை பேரிடர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.