”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை, தொடரும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய ராஜ்நாத் சிங், ”மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, 9 முகாம்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ஆயுதப்படை எடுத்த நடவடிக்கைகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத துணிவுடன் நடத்தப்பட்டது. துல்லியமான நடவடிக்கையின் மூலம் ஆபரேஷன் சிந்தூரை சிறப்பாக செய்து முடித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளன. பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார். உயர் ரக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது. வான் பாதுகாப்பு ஏவுகணையான S-400-ஐ இந்திய விமானப்படை ஏவியது எனக் கூறிய அவர், நிலத்தில் இருந்து வான் வெளியில் வரும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்டது S-400 என்று பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், அமிர்தசரஸ் பொற்கோயிலைத் தாக்கும் பாகிஸ்தானின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு பெரிய அளவில் பாதிப்பில்லை, ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை, அது தொடரும்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்