முகமது சமி: இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார் என்பது நமக்கு தெரியும். அதே நேரம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியும் தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்ததும் நமக்கு தெரியும். விவகாரத்து செய்த இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது, கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் […]
Yashasvi Jaiswal: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக ஜெய்ஸ்வால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More – IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா? ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் […]
IPL: ஒரு ஆண்டில் இரண்டு முறை ஐபிஎல் தொடர்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் இரண்டு ஐபிஎல் தொடர்களை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதால், இந்த கிரிக்கெட் தொடரானது ஒரு பெரிய மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. Read More – IPL 2024 : சிஎஸ்கே போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டும் தான் ..! ஆண்டுக்கு இரண்டு முறை ஐபிஎல் தொடர்கள் வருங்காலத்தில் […]
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பதும் நிஷங்கா படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை […]
இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான இடைக்கால தடையை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தடையானது அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் மோசமாக விளையாடி தொடரிலிருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் […]
19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 7வது போட்டியில் நியூசிலாந்து அணியும், நேபாளம் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஸ்னீஹித் ரெட்டி அபாரமாக விளையாடி 147 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து […]
சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், இறுதியாக நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது, […]
2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட், ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை […]
2028ம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2028ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் சமீப காலமாக மும்முரமாக நடைபெற்று வந்தன. ஏற்கனவே 1896ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் ஒரு விளையாட்டாக சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், போதுமான அணிகள் இடம்பெறாததால் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் 1990ம் […]
2024 ஜூலை மாதம் பாரீஸில் ஒலிம்பிக் போட்டி தொடர் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்ததாக 2026-ல் இத்தாலியில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தான் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 1990ஆம் ஆண்டு முதன் முதலாக, ஒரே ஒரு முறை கிரிக்கெட் போட்டியானது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு இருந்தது. அந்த போட்டியில் […]
தோனியின் ரசிகர் ஒருவர் தனது முதுகில் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளானாலும் ஐபிஎல் தொடரில் இன்னும் சி.எஸ்.கே அணிக்காக கேப்டனாக இருந்து வருகிறார். உலகெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள தோனி, இந்திய அணியின் கேப்டனாக இருந்து மூன்று வித ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எனும் சிறப்பை பெற்றிருக்கிறார். ஐசிசியின் டி-20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என […]
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டித்தொடருக்கான கோப்பை அறிமுகப்படுத்துகையில் சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த தொடருக்கான கோப்பை அறிமுக விழாவில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் , இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் கலந்து கொண்டனர். […]
டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் 16-ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியா அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் சோகத்தில் இருந்தனர். அந்த வகையில், இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கழக தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இந்தியா தோல்வியடைந்ததை பற்றி பேசியுள்ளார். அதில் மிஷ்கின் பேசியது ” ஒரு பெரிய ஷாக் […]
வேகப்பந்து மைதானங்களில் நீங்கள் பேட்டிங் செய்து பழகி விட்டால், அதை விட சிறந்த மைதானம் வேறு எங்கும் இருக்கமுடியாது என்று கோலி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஐசிசியின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணியின் விராட் கோலி அங்குள்ள மைதானங்களின் தன்மையை பற்றி புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலிய மைதானங்கள் பொதுவாக வேகம் மற்றும் பௌன்ஸ் க்கு ஏற்றதாக இருக்கும். இது குறித்து விராட் கோலி கூறியதாவது, ஆஸ்திரேலியா […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில்,கடந்த ஞாயிறு அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி.கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க நிலைமை மோசமானது. அடுத்ததாக களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் அஸ்வின்,1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பதற்றமின்றி , அந்த பந்தை “வைடு” என கணித்து ஆடாமல் விட , 1 […]
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினாலே அது தீபாவளிதான்.அதிலும் , உலகக்கோப்பை டி 20 என்றால் சொல்லவா வேண்டும் ?. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றே தீபாவளி தொடங்கும். டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ததது. ரிஸ்வான் , பாபர் ஆகியோர் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.இந்தியா சார்பாக புனவேஷ்னர் பந்துவீச்சை தொடங்கினர். சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியது. ரிஸ்வான், பாபர் என தொடக்க வீரர்கள் இருவரும் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.நிதானமாக […]
நான் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறமாட்டேன் என்று என் அப்பா நினைத்தார் என்று இந்திய முன்னாள் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார். பள்ளி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடும்போது தோனி தனது பள்ளி கால நினைவைப் பகிர்ந்துள்ளார். என் அப்பா நான் பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறமாட்டேன் என்றே எண்ணினார் எனக்கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி பலசாதனைகளைப் படைத்துள்ளார். […]
நான் துவண்டு போன நேரத்தில் என்னை தட்டிக் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர்கள் எனது நண்பர்கள். – என திண்டுக்கல் கிரிக்கெட் சங்க விளையாட்டு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சியாக தனது நண்பர்கள் பற்றி குறிப்பிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் அங்குள்ள கிரிக்கெட் சங்கத்தின் 37 ஆவது ஆண்டு விழா நேற்று முன்தினம் அப்பகுதியில் ஓர் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு […]
விராட் கோலி, ராகுல் டிராவிட் ஐ பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிற்கான அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய 3 வது டி-20 போட்டியில் விராட் கோலி 63 ரன்கள் குவித்ததன் மூலம் 24,078 ரன்களுடன் இந்தியாவிற்கான அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறார். 24,064 ரன்களுடன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.சர்வதேச கிரிக்கெட்டில், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், இந்திய ஜாம்பவான் […]
திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் மணமகளிடம் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள். மதுரையை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் மதுரையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மணமகன் ஹரி பிரசாத் கிரிக்கெட் கொண்டவர். இந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு வந்த ஹரிபிரசாத்தின் நண்பர்கள், திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ரூ.20 பத்திரத்தில் மணமகள் பூஜாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.