பெங்களூர் :இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த உலகளாவிய போட்டி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவமபர் 2 வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதன் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையின் ஐந்து நகரங்களில் நடைபெறும், இதில் பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி, குவஹாத்தியில் உள்ள ஏசிஏ மைதானம், இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானம் ஆகியவை அடங்கும்.
மகளிர் உலககோப்பை இந்தியாவில் 4 மைதானங்களிலும் இலங்கையில் கொழும்பு மைதானத்திலும் நடைபெறுகிறது. மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 2ம் தேதி பெங்களூரு மைதானத்தில் நடைபெறும். செப்.30 பெங்களூருவில் நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளது.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 அட்டவணை:
செவ்வாய் 30 செப்டம்பர்: இந்தியா v இலங்கை – பெங்களூரு
புதன்கிழமை 1 அக்டோபர்: ஆஸ்திரேலியா v நியூசிலாந்து – இந்தூர்
வியாழக்கிழமை 2 அக்டோபர்: வங்கதேசம் v பாகிஸ்தான் – கொழும்பு
வெள்ளிக்கிழமை 3 அக்டோபர்: இங்கிலாந்து v தென்னாப்பிரிக்கா – பெங்களூரு
சனிக்கிழமை 4 அக்டோபர்: ஆஸ்திரேலியா v இலங்கை – கொழும்பு
ஞாயிற்றுக்கிழமை 5 அக்டோபர்: இந்தியா v பாகிஸ்தான் – கொழும்பு
திங்கள் 6 அக்டோபர்: நியூசிலாந்து v தென்னாப்பிரிக்கா – இந்தூர்
செவ்வாய் 7 அக்டோபர்: இங்கிலாந்து v வங்கதேசம் – குவஹாத்தி
புதன்கிழமை 8 அக்டோபர்: ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் – கொழும்பு
வியாழக்கிழமை 9 அக்டோபர்: இந்தியா v தென்னாப்பிரிக்கா – விசாக்
வெள்ளிக்கிழமை 10 அக்டோபர்: நியூசிலாந்து v வங்கதேசம் – விசாக்
சனிக்கிழமை 11 அக்டோபர்: இங்கிலாந்து v இலங்கை – குவஹாத்தி
ஞாயிற்றுக்கிழமை 12 அக்டோபர்: இந்தியா v ஆஸ்திரேலியா – விசாக்
திங்கள் 13 அக்டோபர்: தென்னாப்பிரிக்கா v வங்கதேசம் – விசாகப்பட்டினம்
செவ்வாய் 14 அக்டோபர்: நியூசிலாந்து v இலங்கை – கொழும்பு
புதன்கிழமை 15 அக்டோபர்: இங்கிலாந்து v பாகிஸ்தான் – கொழும்பு
வியாழன் 16 அக்டோபர்: ஆஸ்திரேலியா v வங்கதேசம் – விசாகப்பட்டினம்
வெள்ளிக்கிழமை 17 அக்டோபர்: தென்னாப்பிரிக்கா v இலங்கை – கொழும்பு
சனிக்கிழமை 18 அக்டோபர்: நியூசிலாந்து v பாகிஸ்தான் – கொழும்பு
ஞாயிற்றுக்கிழமை 19 அக்டோபர்: இந்தியா v இங்கிலாந்து – இந்தூர்
திங்கள் 20 அக்டோபர்: இலங்கை v வங்கதேசம் – கொழும்பு
செவ்வாய் 21 அக்டோபர்: தென்னாப்பிரிக்கா v பாகிஸ்தான் –
புதன்கிழமை 22 அக்டோபர்: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து – இந்தூர்
வியாழன் 23 அக்டோபர்: இந்தியா v நியூசிலாந்து – குவஹாத்தி
வெள்ளிக்கிழமை 24 அக்டோபர்: பாகிஸ்தான் v இலங்கை – கொழும்பு
சனிக்கிழமை 25 அக்டோபர்: ஆஸ்திரேலியா v இலங்கை – இந்தூர்
ஞாயிறு அக்டோபர் 26: இங்கிலாந்து v நியூசிலாந்து – குவஹாத்தி
ஞாயிறு அக்டோபர் 26: இந்தியா v வங்கதேசம் – பெங்களூரு
புதன்கிழமை அக்டோபர் 29: அரையிறுதி 1 – குவஹாத்தி/கொழும்பு
வியாழன் 30 அக்டோபர்: அரையிறுதி 2 – பெங்களூரு
ஞாயிறு நவம்பர் 2: இறுதி – கொழும்பு/பெங்களூரு
