இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் களமிறங்குகிறார்.

ENGvIND

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது, இப்பொது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும்.

இந்திய அணியின் பிளெயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். கோலி, ரோஹித் ஓய்வு பெற்றதால் அனுபவமில்லாத ஒரு அணியாக இந்தியா களமிறங்குகிறது.

இதை சமாளிக்கும் வகையில் 25 வயதான கில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போல் இளம் வீரர்கள் தங்களின் பெயரை நிலைநாட்டுவதற்கும், 2007-க்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை ருசிக்கவும் அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா அணி:

கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி:

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக்,ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங்கு மற்றும் ஷோயப் பஷீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக, இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் களமிறங்குகிறார். டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்தை பெறும் சாய் சுதர்சனுக்கு இந்திய வீரர் சட்டீஸ்வர் புஜாரா, டெஸ்ட் கேப்பை (Test Cap number
3 17 ) வழங்கினார்.

மேலும், கருண் நாயரும் களமிறங்குகிறார். முன்னதாக, பேட்டி ஒன்றில் ‘இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டும்’என்பதே முதல் எண்ணமாக இருந்தது என கருண் நாயர் தெரிவித்திருந்தார். இதற்கு முன், 2018-ம் ஆண்டு டெஸ்ட் அணியில் இடம்பெற்ற இவர், நீண்ட இடைவெளிக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளார்.

இது பற்றி மைதானத்தில் பேசிய அவர், ‘டிவி-யில் போட்டியை காணும் போது எப்போது மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணியிருந்தேன், ஆனால் தற்போது டிரஸ்ஸிங் ரூம் செல்லும் போது IM BACK என்ற உணர்வு’ வந்துள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்