தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும், ஜம்முவின் ரஜோரி, உரி, அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஜம்முவில் உள்ள பொது மக்கள் வீடுகளை குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இன்று காலை 5 மணியளவில் அமிர்தசரஸின் காசா காண்ட் மீது பறந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய இறையாண்மையை சீர்குலைத்து, இந்திய மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தான் அப்பட்டமான முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. எதிரிகளின் திட்டங்களை இந்திய ராணுவம் முறியடிக்கும் எனவும் உறுதியளித்துள்ளது.
இப்படி இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரான்களை இந்தியா இடைநிறுத்தி தடுத்து அழித்துள்ளது. இதனால், ஆங்காங்கே ஏவுகணை பாகங்கள் சிதறி கிடக்கிறது. இது தொடர்பான காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் தாக்குதலில் சிதைந்து கிடக்கும் பாகிஸ்தான் பஞ்சாப்பின் ரஹிம் யார் கான் விமான தளத்தின் வீடியோ காட்சி வெளிவந்துள்ளது. ஓடுபாதையில் இந்திய ஏவுகணை தாக்கியதாக கூறப்படும் சூழலில், பெரிய பள்ளம் ஒன்றும் ஏற்பட்டுள்ளது.
#WATCH | Punjab: Visuals of hollowed ground in a field in Chhichhra village of Gurdaspur. As per Police, an explosion sound was also heard here earlier this morning.
Inspector Jasvinde Pal Singh says, “…It happened around 4.45 am. No loss has occurred. All officers, including… pic.twitter.com/oI2QvFXe5p
— ANI (@ANI) May 10, 2025
மேலும், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கிராமப்புறத்தில் உள்ள வயலில் இடைமறிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணையின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
#WATCH | Debris of a projectile retrieved at a field in Punjab’s Jalandhar pic.twitter.com/Yf1r395z66
— ANI (@ANI) May 10, 2025
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் இருந்து சேதமடைந்த ஒரு பாகிஸ்தான் ஏவுகணையின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
#WATCH | Parts of a damaged object being retrieved from Jammu & Kashmir’s Udhampur, security personnel are at the spot. pic.twitter.com/9XgVv1M6kr
— ANI (@ANI) May 10, 2025
ஹரியானாவின் சிர்சாவில் இந்தியாவால் இடைமறிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணையின் பாகங்கள் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
#WATCH | Parts of a missile seen in Haryana’s Sirsa are being retrieved by security personnel.
(Visuals obtained from locals) pic.twitter.com/lzbx2LYXUp
— ANI (@ANI) May 10, 2025
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தானின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
#WATCH | Parts of a projectile found in a field in Amritsar, Punjab. pic.twitter.com/bPxXOxWT8n
— ANI (@ANI) May 10, 2025