அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக 32 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இரு நாட்டு எல்லையோர பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடல், பொதுமக்கள் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் என தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பல்வேறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வெளியான தகவலின்படி போர் பதற்றம் காரணமாக 32 விமான நிலையங்கள் வரும் மே 15ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) வெளியிட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள விமான நிலையங்கள் :
1. ஆதம்பூர் (பஞ்சாப்)
2. அம்பாலா (ஹரியானா)
3. அமிர்தசரஸ் (பஞ்சாப்)
4. அவந்திபூர் (ஜம்மு காஷ்மீர்)
5. பதிண்டா (பஞ்சாப்)
6. புஜ் (குஜராத்)
7. பிகானர் (ராஜஸ்தான்)
8. சண்டிகர் (ஹரியானா)
9. ஹல்வாரா (பஞ்சாப்)
10. ஹிண்டன் (உ.பி )
11. ஜெய்சால்மர் (ராஜஸ்தான்)
12.ஜம்மு (ஜம்மு காஷ்மீர்)
13.ஜாம்நகர் (குஜராத்)
14.ஜோத்பூர் (ராஜஸ்தான்)
15. காண்ட்லா
16. காங்க்ரா (கக்கல்)
17.கேஷோத் (குஜராத்)
18. கிஷன்கர்
19. குலு மணாலி (பூந்தர்)
20. லே (ராஜஸ்தான்)
21. லூதியானா (பஞ்சாப்)
22. முந்த்ரா (குஜராத்)
23. நலியா (குஜராத்)
24. பதான்கோட்
25. பாட்டியாலா
26. போர்பந்தர்
27. ராஜ்கோட் (ஹிராசர்)
28. சர்சாவா (பஞ்சாப்)
29 சிம்லா (இமாச்சல பிரதேசம்)
30. ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்)
31. தோயிஸ் (லடாக்)
32. உத்தரலை (ராஜஸ்தான்)