ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
போர் பதற்றம் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு நடப்பு ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில் இந்த தொடர் முடிவுக்கு வரும் என எதிர்பாத்து காத்திருந்த வேளையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் தரும் செய்தியானது பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.
தற்போது இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு இன்று, ஐபிஎல் 2025 போட்டிகளை தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா என பிசிசிஐ மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு சீசனில் குஜராத் (GT), பெங்களூரு (RCB), பஞ்சாப் (PBKS), மும்பை (MI), டெல்லி (DC), லக்னோ (LSG) ஆகிய அணிகள் அடுத்த சுற்றை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருந்த வேளையில் இந்த தகவல் ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025