அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!
சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக்ஸ் வைத்த நடிகர் இருக்கிறார்களா? என ரெட்ரோ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சிவகுமார் பேசியுள்ளார்.

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, சிவகுமார், கார்த்திக் சுப்புராஜ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
அப்போது பேசிய சிவகுமார் ” ரெட்ரோ திரைப்படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. உங்களுடைய ஆதரவினால் படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என நான் நம்புகிறேன்” என முதலில் படம் குறித்து வாழ்த்துக்கள் தெரிவித்து சிவகுமார் பேசினார்.
அதனை தொடர்ந்து சிவகுமார் குறித்து அவர் பேசும்போது ” தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக்ஸ் வைத்த நடிகர் சூர்யா தான். சூர்யாவுக்கு முன்னாடி யாரவது வைத்திருக்கிறார்களா? உடம்பை வற்புறுத்தி சிக்ஸ் பேக்ஸ் வைத்த நடிகர் வேறு யார் இருக்காங்க? இவ்வளவு வருடங்கள் கடந்தும் சிறந்த நடிகராக இருக்கும் சூர்யாவை வளர்த்துவிட்ட அனைத்து இயக்குனர்களுக்கும் கார்த்திக் சுப்புராஜ் உட்பட அனைத்து இயக்குனர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என பேசினார்.
அதன்பிறகு சூர்யா மிகப்பெரிய நடிகராக வருவார் என ஜோதிடர் கணித்து சொன்ன கதை ஒன்றை பற்றியும் சிவகுமார் பேசினார். இது பற்றி பேசிய அவர் ” சூர்யா 17 வயதில் இருந்தபோதே நான் ஒரு ஜோதிடரை சந்தித்தேன். அந்த ஜோதிடர் சூர்யா கலைத்துறையில் பெரிய ஆளாக வருவார் என்று ஒரு சொன்னார். இதனை கேட்டவுடன் நான் உண்மையில் நம்பவே இல்லை. இருந்தாலும் நான் அவரிடம் கேட்டேன் இயக்குநர், ஒளிப்பதிவாளர்… அந்த மாதிரியா? என்று அதற்கு அவர் ‘முகத்தை வைத்துச் செய்யும் தொழில் என மறைமுகமாக சொன்னார்.
உடனடியாக நான் நடிகரா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஒரு வார்த்தை சொன்னார். ஆம் என்று உடனே அதற்கு நான் திரும்ப அவர் (சூர்யா) காலையில் இருந்தே எழுந்தவுடன் 4 வார்த்தை தான் பேசுவார். அவர் எப்படி ஹீரோ உனக்கு என்ன பைத்தியமா? என்று கேட்டேன். அதற்கு அந்த ஜோதிடர் உங்களை விட அவர் பெரிய நடிகர் என்ற பெயரை வாங்குவார் என்று சொன்னார். அதைப்போலவே இன்று சூர்யா வளர்ந்திருக்கிறார்” எனவும் தந்தை சிவகுமார் நெகிழ்ச்சியுடன் பேசினார்.