Tag: cuddalore

‘குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா’ – முதல்வர் அறிவிப்பு!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி, இன்று காலை சிதம்பரம் நகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தின் முதல் முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம், அரசு சேவைகள் மற்றும் திட்டங்களை மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டது. பின்னர், வேளாண்மை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, சமூக நலன், மற்றும் மகளிர் உரிமைத் துறைகள் உள்ளிட்ட […]

cuddalore 4 Min Read
TN Govt - MK Stalin

கடலூர் ரயில் விபத்து : உண்மை காரணம் என்ன? விசாரணையில் உறுதி செய்யப்பட்ட தகவல்!

கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ரயில்வே கேட்டை மூடாமல், மூடிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தவறான தகவல் அளித்தது இந்த பயங்கர விபத்துக்கு வழிவகுத்தது. இந்த சம்பவம், ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை வெளிச்சமிட்டு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல், அதை முறையாக மூடிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரிவித்தார். இதனால், […]

#Students 5 Min Read
cuddalore accident

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் (நிமலேஷ், சாருமதி, செழியன்) உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் மாணவர் விஸ்வேஸ் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தபோது ரயில்வே கேட் மூடப்படாததால், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியம் காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் […]

#Accident 4 Min Read
Cuddalore Train Accident

கடலூர் ரயில் விபத்து: செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்.!

கடலூர் : செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில், ஒரு தனியார் பள்ளி வேன் மீது மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், சில மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்து நடந்தபோது, ரயில்வே கேட் திறந்த நிலையில் இருந்ததாகவும், […]

#Students 4 Min Read
Train Accident

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை விரைவு ரயில் (வண்டி எண்: 12654 ராக்ஷஸ் எக்ஸ்பிரஸ்) பள்ளி வேனுடன் மோதியது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் (வயது 10-12) உயிரிழந்தனர், மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் எனக் கருதப்படுகிறது. ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் […]

#Students 3 Min Read
Gate Keeper -Arrest

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை நடந்த மிகுந்த பரிதாபமான விபத்தில், பள்ளி வேன் ஒன்று ரயிலுடன் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.  இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், பள்ளி வேன் ரயில்வே கேட் இல்லாத பாதையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக […]

#Accident 5 Min Read
Vijay - Train Accident

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை (லெவல் கிராசிங் எண் 170, இன்டர்லாக் இல்லாத கேட்) கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (எண் 56813) மோதியதால் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேன் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது இந்த விபத்தில் […]

#Accident 9 Min Read
Train Accident

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே, ஆச்சாரியா பள்ளியின் வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் […]

#Accident 7 Min Read
Anbazhagan

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய கோர விபத்தில், தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த மாணவி சாருமதி (16, 11ஆம் வகுப்பு), அவரது தம்பி செழியன் (15, 10ஆம் வகுப்பு) மற்றும் ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சில மாணவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தபோது, ரயில்வே கேட் திறந்தநிலையில் […]

#Accident 7 Min Read
Cuddalore accident driver statement

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்தில், தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த மாணவி சாருமதி (16, 11ஆம் வகுப்பு) மற்றும் அவரது தம்பி செழியன் (15, 10ஆம் வகுப்பு) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் வேன் முற்றிலும் நொறுங்கியதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து, செம்மங்குப்பத்தில் உள்ள […]

#Accident 5 Min Read
kadalur accident today

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் சில மாணவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை (45) என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இரட்டை […]

#Accident 8 Min Read
SchoolVan Accident

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையிலே இந்த செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை (45) என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால், மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே […]

#Accident 5 Min Read

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து இன்று (ஜூலை 8, 2025) காலை செம்மங்குப்பம் அருகேயுள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் நடந்தது. பள்ளிவேன், ஆளில்லா கேட்டைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த ரயில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் நொறுங்கியதாகவும், இதில் பயணித்த மாணவர்களுக்கு கடுமையான […]

#Accident 5 Min Read
SchoolVan Accident

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகள் அபிதா என்ற இளம் பெண்ணுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக போய்க்கொண்டு இருந்தது. இப்படியான சூழலில் திடீரென அர்ஜுனன் தன்னுடைய மகள் அபிதாவை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலே அபிதா துடி துடித்து உயிரிழந்த நிலையில், மகளை கொன்றுவிட்டு அர்ஜுனன் தலைமறைவானார். பிறகு இது குறித்து […]

Arjunan 4 Min Read
murder

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை : தமிழ்நாடு எங்கே போகிறது? இபிஎஸ் காட்டமான கேள்வி!

கடலூர் : மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தில், 80 வயது மூதாட்டி கவுசல்யா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ஐந்து வாலிபர்கள் மூதாட்டியை இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கியதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மூதாட்டி, தனது மகன் ஷங்கருடன் வசித்து வந்த நிலையில், மாலையில் நடைபயிற்சிக்காக வெளியே சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. […]

#ADMK 7 Min Read
edappadi palanisamy mk stalin DMK

பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துட்டு மேல கை வைங்க! போலீசிடம் உத்தரவு போட்ட குற்றவாளி!

கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் குற்றவாளியாக கருதப்படும் அந்த நபர் தனது துணியை போலீசார் கிழுத்துவிட்டதால் புது துணியும்  கேட்கிறார். வீடியோவில் பேசிய அவர் ” என்னுடைய டிரஸை கிழுத்துவிட்டிர்கள். எனக்கு புது துணி வாங்கிக்கொண்டு வாருங்கள். உங்களுடைய டிசர்ட் எனக்கு பத்தாது தான் எனக்கு அதனால் புது துணி வேண்டும். […]

#Police 4 Min Read
Cuddalore district

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு! மா. கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கைது!  

கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில், மலையடி குப்பம், பெத்தான் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில் விவசாயிகள் முந்திரி காடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதால் அங்குள்ள முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி […]

#Protest 3 Min Read
CPIM P Shanmugam Arrest

“கடலூருக்கு அசத்தலான 10 முக்கிய அறிவிப்புகள்..,” லிஸ்ட் போட்ட முதலமைச்சர்!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும்  புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்த வருகிறார். அவ்வாறு தற்போது கடலூரில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கடலூருக்கு புதிய 10 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையாக அறிவித்தார். முதலமைச்சர் அறிவித்த 10 அறிவிப்புகள் : திட்டக்குடி, விருத்தாச்சலம் பகுதியில் உள்ள வேளாண் மக்கள் பயன்பெறும் வகையில் வெலிங்டன் ஏரி கரைகள் பலப்படுத்தப்படும். அப்பகுதி […]

#DMK 6 Min Read
Tamilnadu CM MK Stalin

2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்

கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 25 தொகுதிகளை கேட்போம் என கூறியிருந்தார். விசிக துணை பொதுச்செயலாளரின் இந்த கருத்து குறித்து இன்று கடலூரில் சேத்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னி அரசு பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை நாங்கள் எங்கள் கட்சி குழுவினருடன் கலந்து ஆலோசித்து […]

#DMK 4 Min Read
VCK Leader Thirumavalavan

பள்ளி கல்லூரி விடுமுறை அப்டேட் : அரையாண்டு தேர்வுகள் எப்போது?

சென்னை : வங்கக்கடலில் உருவாகி வடதமிழகத்தில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கம் ஒருவாரம் ஆகியும் இன்னும் பல்வேறு பகுதிகளில் தொடர்கிறது. இன்னும் வடதமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமலே இருக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழலும் நிலவி வருகிறது. மழைநீர் வடிந்த பிறகு நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு செயல்பட தொடங்கின. புதுச்சேரி மாநிலத்தில் நிவாரண […]

#Puducherry 4 Min Read
Vilupuram dt school college leave