சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டிய வழக்கில், தமிழகத்தில் சென்னை, கோவை, மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நான்கு பேரை கைது செய்தது. இந்த வழக்கு, 2022 அக்டோபர் 23 அன்று கோவையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக உள்ளது. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் […]
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரது சகோதரி பொன்னரசி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, ராஜாவும் அவரது மனைவி அனுஷாவும், பொன்னரசியை அவர்களது நிறுவனமான ஒம்மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 16% பங்குகளை ஒதுக்குவதாக உறுதியளித்து முதலீடு செய்ய வைத்தனர். ஆனால், […]
திருவள்ளூர் : மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் (23) என்ற இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாஸ்ரீ (21) என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து, கடந்த மே மாதம் 15ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்தக் காதல் திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனுஷின் 16 வயது சகோதரரை கடத்தியதாக புகார் எழுந்தது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் […]
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை கைது செய்யப்பட்ட ஆறு பேரில் பெண் யூடியூபர் ஒருவரும் அடங்குவார். கைது செய்யப்பட்ட இந்த அனைவரும் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், எதிரிக்கு தகவல்களை வழங்கியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களில் கைதாலில் ஒருவர், பானிபட்டில் ஒருவர், நுஹ் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டனர், ஹிசாரில் இருந்து ஒரு பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது […]
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது என்பிடிஎஸ் பிரிவு 27,29ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டு, பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி நகர வடக்கு காவல்துறை அதிகாரிகளால் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மெடிக்கல் […]
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில், எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசார் ரெய்டுக்குச் சென்ற போது, அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். போதைப் பொருள் குறித்த சோதனையின் போது தப்பி ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இன்று விசாரித்த நிலையில், குற்றம் […]
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் திருநெல்வேலி மாவட்டம், நெல்லை டவுன் பகுதியில் உள்ள குருநாதன் கோவில் விளக்கு அருகே நடந்துள்ளது. ஒரு இளைஞர் இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகம் என்ற இளைஞரை அடித்து கொலை செய்து […]
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை வருகைபுரிந்த, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்பட்ட நிலையில், கிண்டியில் […]
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆண்டு கொல்கத்தாவில் மட்டும் 930-க்கும் மேற்பட்ட இத்தகைய புகாரில் சிக்கியிருந்தார்கள். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களே என்பதும் தெரிய வந்தது. இது போன்ற மோசடியில் வயதானவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்தது வருகிறது. இந்த சூழலில் மும்பையை சேர்ந்த 86 வயது முதிய பெண் […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என கண்டனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. பாஜகவை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இன்று சட்டப்பேரவையில் இது குறித்து வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தமிழக அரசு வாங்கும் கடன்களை மூலதனங்களில் […]
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ரவுடிகள் அருண் குமார் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோர் கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். மொத்தம் 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாகவும், […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக கண்டனங்களை தெரிவித்து நேற்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்ட நிலையில், இந்த போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய பாஜக […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக கண்டனங்களை தெரிவித்து இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய பலரையும் காவல்துறை காலையிலே அதிரடியாக கைது செய்தது. பாஜக […]
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என தெரியவந்ததாகவும் வெளியான தகவல் தான் ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக வெடித்துள்ளது. இந்த சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் ஆதாரம் இருக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பி பாஜகவை விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார். இது […]
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என கூறப்பட்டது. இதனை குறிப்பிட்டு இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை முதலே […]
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அனுமதி பெறவில்லை எனக் கூறி தவெகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று காலை மகளிர் தினத்தை முன்னிட்டு, 2026 தேர்தலில் திமுக அரசை மாற்ற உறுதியேற்போம் என்று விஜய் வலியுறுத்தினார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் […]
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என கடந்த 5ம் தேதி தவெக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், தவெக சாா்பில் அளிக்கப்பட்ட மனுவை கண்டித்து திமுகவினர் தகராறு செய்துள்ளனர். அதாவது, ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்ததும், திமுகவினரை செர்ந்த சிலர் தகராறு செய்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் […]
பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யபட்டார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது, விசாரணைக்காக ரன்யா […]
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தொடர்பான நேரில் ஆஜராக சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். இதை வீட்டில் இருந்த காவலாளி உள்ளிட்ட இருவர் கிழித்தெறிந்தனர். இதை விசாரிக்க சென்ற போலீசாரையும் அவர்கள் தாக்க முற்பட்டதால், […]
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர். அதன் பிறகு சம்மன் கிழிக்கப்பட்டது, அது குறித்து விசாரிக்க போலீஸ் வந்தபோது, சீமான் வீட்டு பாதுகாவலருடன் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது காவலாளி அமல்ராஜை கைது செய்த போலீசார், கைத் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய சீமான், “இவ்வளவு மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? நான் விசாரணைக்கு […]