போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Hero Image

டெல்லி : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து வந்த தீவிர போராட்டத்தைத் தொடர்ந்து ஒன்றிய அரசு இந்த முடிவை எட்டியுள்ளது.

டெல்லியில் போராட்டக்காரர்களைக் பிடிக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சில மணி நேரங்களுக்குள், சனிக்கிழியன்று தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியதாகத் தமது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், "தேச விரோத சக்திகள்" இதைப் பயன்படுத்தி மாணவர்களைத் திசைதிருப்பக் கூடாது என்பதற்காகவும் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்கள் சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் தங்களது கல்வி மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் ராஜினாமா செய்தி பரவியதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் மகிழ்ச்சிக் ஆரவாரம் எழுப்பி வெற்றியைக் கொண்டாடினர்.

பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் மீது அதிருப்தியில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைக்கும் அரசியல் நையாண்டி இயக்கமான 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தலைமையில் இந்தத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், தலைநகரில் போராட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் இணையதள சேவைகளையும், 18 மெட்ரோ நிலையங்களையும் தற்காலிகமாக முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!