JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில்,10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய 2-ம் கட்ட தேர்வில் முழுமையாக 100 மதிப்பெண்களை பெற்று 2 பெண்கள் உட்பட 56 மாணவர்கள் […]
கடந்த 11-ஆம் தேதியே அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.! அதன்படி, இன்று தொடங்கி டிசம்பர் 22-ம் […]
கனமழை எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு முதல் படிப்படியாக மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலி..! திருவள்ளூர் […]
தமிழகத்தில் டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடைபெறும் என அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் டிச.22ம் தேதி வரையும், 6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு […]
மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது என சு.வெங்கடேசன் எம்.பி கருத்து. கோவை அனில்குமாருக்கு உத்தரகாண்ட் – கனாசரில் தேர்வு மையம் போடப்பட்டிருந்ததை மாற்றித்தர கோரிய கடிதத்திற்கு வந்துள்ள பதில் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘இயந்திரம் இயந்திரத்தனமாகத்தான் இருக்கும். ஆகவேதான் மனித தலையீடு வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு. மாண்டஸ் புயல் எதிரொலியால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் நாகையை சேர்ந்த மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை, 1.31 லட்சம் பேர் எழுதவில்லை தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை எழுத 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும், 1080 இடங்களிலும், சென்னையில் மட்டும் 149 இடங்களிலும் நடைபெற்றது. 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்கை குறி முறையில் இந்த […]
தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கி .நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கியது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவது, 1080 இடங்களில் பிற்பகல் 12:30 வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 149 இடங்களில் குரூப்-1 முதல் நிலை […]
டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வு கடந்த மாதம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பொறியியல் கல்லூரிகளுக்கு டிச.8 முதல் செமஸ்டர் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் செமஸ்டர் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் II, II A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA (தொகுதி-II/IIA) இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. […]
நவம்பர் 2 & 13-ம் தேதி நடைபெறும் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான தேர்வு மையம் குறைப்பு. நவம்பர் 2 & 13-ம் தேதி நடைபெறும் தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான தேர்வு மையம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’17/2022, நாள் 28.07.2022-ல் தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவ கல்வித் துறை) மற்றும் தமிழ்நாடு வழித் தேர்வு 12.11.2022 (மு.ப மற்றும் […]
எஸ்.எஸ்.சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. அதன் படி இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.எஸ்.சி தேர்வில் Group B மற்றும் Cக்கான பல்வேறு அமைச்சகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப […]
அக்டோபர் 15 -ல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு. இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வானது அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான கேள்விகள் பத்தாம் […]
முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் அறிவிப்பு. இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://cuet.samarth.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரும் 4,5,6 தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ள நிலையில், 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும், முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். பொதுப் பல்கலைக்கழக […]
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு. இன்று காலை சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள், http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு. தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை (ஜூன் 17 ஆம் தேதி) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம். தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்கள் இன்று முதல் வரும் 8-ஆம் தேதி வரை திருத்தும் பணி நடைபெறுகிறது. இதனிடையே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினமும் முடிவடைந்தது. […]
தமிழகத்தில் குரூப் 2 குரூப் 2ஏ-இல் 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதனையடுது,கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு 4,012 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், இத்தேர்வுகளை சுமார் 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்திருந்தது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( […]