இதற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு! 1,500 மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய்! – அமைச்சர் அறிவிப்பு
தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் நாகையை சேர்ந்த மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் மாணவிகளே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபரில் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வை 2,50,000 மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.