டெல்லி : இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் வாடிக்கையாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புகழ்பெற்ற மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிஷன் (Monster Energy Yamaha MotoGP Edition) மாடல்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. யமஹாவின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் R15 V4 மற்றும் MT-15 V2 ஆகிய இரண்டு அதிநவீன பைக் மாடல்களிலும் இந்த ஸ்பெஷல் எடிஷன் களமிறக்கப்பட்டுள்ளது.
யமஹா R15 V4 மோட்டோஜிபி எடிஷன் (Yamaha R15 V4 MotoGP Edition)
யமஹாவின் புகழ்பெற்ற ரேசிங் டிஎன்ஏ (Racing DNA) மற்றும் ஸ்போர்ட்ஸ் வம்சாவளியை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் இந்த பெப்பர்டு பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ப்ளூ கலர் மற்றும் மோட்டோஜிபி பிராண்டிங் லுக் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
விலை விவரம்: இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.1,76,050 முதல் ரூ.1,89,630 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்).
மைலேஜ் : இந்த பைக்கானது லிட்டருக்கு தோராயமாக 45 முதல் 51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. சிறப்பம்சங்கள்: இதில் 155 சிசி லிக்யூடு-கூல்டு எஞ்சின், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், குவிக் ஷிஃப்டர் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் போன்ற அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
யமஹா MT-15 வெர்ஷன் 2.0 மோட்டோஜிபி எடிஷன் (Yamaha MT-15 Version 2.0 MotoGP Edition)
ஸ்ட்ரீட் ஃபைட்டர் (Streetfighter) வடிவமைப்பு மற்றும் மிரட்டலான தோற்றத்திற்கு பெயர்பெற்ற MT-15 பைக்கின் இந்த மோட்டோஜிபி எடிஷன், நகர்ப்புற மற்றும் சாகசப் பயண விரும்பிகளைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
விலை விவரம்: இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.1,74,000-ல் தொடங்குகிறது.
மைலேஜ் : சிறப்பான செயல்திறனுடன் சேர்த்து, இந்த மாடல் லிட்டருக்கு சுமார் 56.87 கிலோமீட்டர் வரை மிகச்சிறந்த மைலேஜ் வழங்கும் என நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் : 155 சிசி விவிஏ (VVA) எஞ்சின், எல்.இ.டி. ஹெட்லைட்டுகள், ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் தசாப்த கால மோட்டோஜிபி பிரத்யேக கிராபிக்ஸ் வடிவமைப்பு ஆகியவை இதன் முக்கிய பலடங்களாகும்
