மிட்செல் மார்ஷ் என்ட்ரி, சாம் கரன் அணி மாற்றம்...MI Cape Town-க்கு மாஸ் அப்டேட்!

SA20 2027 தொடருக்கான அணிகள் தக்கவைத்த மற்றும் ஒப்பந்தம் செய்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மிட்செல் மார்ஷ் முதல் முறையாக SA20-ல் அறிமுகமாகிறார்.

Hero Image

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மிகவும் புகழ்பெற்ற டி-20 கிரிக்கெட் திருவிழாவான SA20 தொடரின் 5-வது சீசன் (Season 5) அடுத்த ஆண்டு தொடங்குவதற்கான ஆயத்தங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடர் வரும் 2027 ஜனவரி 17 அன்று கோலாகலமாகத் தொடங்கி, இறுதிப்போட்டியுடன் பெப்ரவரி 21 அன்று நிறைவடையவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆறு முக்கிய ஃப்ரான்சைசி அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொண்ட (Retained) மற்றும் ஒப்பந்தம் செய்த வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளன.

மிச்செல் மார்ஷ் அறிமுகம்: ஆஸ்திரேலிய டி-20 அணியின் கேப்டன் மிச்செல் மார்ஷ், இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக SA20 தொடரில் களமிறங்க உள்ளார். இவர் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஈஸ்டரன் கேப் (Sunrisers Eastern Cape) அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார். இவருடன் குவின்டன் டி காக், மேத்யூ மற்றும் கேப்டன் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அணியை மேலும் பலப்படுத்துகின்றனர்.

சாம் கரன் அணி மாற்றம்: கடந்த இரண்டு பருவங்களாக 'MI கேப் டவுன்' அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் சாம் கரன், இந்த முறை டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் (DSG) அணிக்கு மாறியுள்ளார். இவருடன் இங்கிலாந்து அணியின் சக வீரர் ஜோஸ் பட்லர் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

வில் ஜாக்ஸ் புதிய பயணம்: பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இங்கிலாந்தின் அதிரடி ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ், இந்த முறை MI கேப் டவுன் அணியின் காவலுக்கு மாறியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த அணி மாற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற நட்சத்திரங்கள்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜேசன் ஹோண்டர் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (JSK) அணிக்காகவும், இங்கிலாந்தின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்காகவும் இந்த முறை விளையாட உள்ளனர்.

தற்போதைய அணிகளின் நிலவரம்

தற்போது வரை 'டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ்' மற்றும் 'பார்ல் ராயல்ஸ்' ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே தலா 19 வீரர்களைக் கொண்ட முழுமையான பட்டியல் (Squad) ஏலத்திற்கு முன்பே உறுதி செய்துள்ளன. மீதமுள்ள அணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வீரர்களின் ஏலம் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

MI கேப் டவுன் (MI Cape Town) அணியின் தற்போதைய விவரம்:

வில் ஜாக்ஸ், ரஷித் கான், நிகோலஸ் பூரன், கார்பின் போஷ், ரீசா ஹென்றிக்ஸ், தாமஸ் கபேர், ஜார்ஜ் லிண்டே, டென் பியெட், ரையன் ரிக்கெல்டன், ஜேசன் ஸ்மித், தியான் வான் வூரன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ககிசோ ரபாடா.

மிட்செல் மார்ஷ் என்ட்ரி, சாம் கரன் அணி மாற்றம்...MI Cape Town-க்கு மாஸ் அப்டேட்!