5 மணி நேரமாக தீப்பற்றி எரியும் சரக்கு ரயில்.., தற்போதைய நிலவரம் என்ன?
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால், ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்கள் (கச்சா எண்ணெய்) ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் எரிபொருள் கசிந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ மளமளவென பரவி, எட்டு பெட்டிகளுக்கு பரவியதால், திருவள்ளூர் ஏகாட்டூர் பகுதியைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு கரும்புகை பரவியது, இதனால் அருகே இருந்த வசித்து வரும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர்.
நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அருகிலுள்ள இருளர் குடியிருப்பு மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரக்கோணத்தில் இருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது விபத்து காரணாமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவிருந்த வந்தே பாரத், சதாப்தி, சப்தகிரி உள்ளிட்ட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் பயணிகள் வசதிக்காக திருவள்ளூரில் இருந்து சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடங்களில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும், சென்ட்ரல் – கோவை மார்க்கம் மற்றும் கர்நாடகா செல்லும் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் -அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், திருவள்ளூர் – அரக்கோணம் மார்கத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸா பெருமாள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பொதுமக்கள் தீ எரியும் இடத்தில் கூட வேண்டாமென அறிவுறுத்தினர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!
July 13, 2025