"டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சித் தேர்தல்" – அமைச்சர் துரைமுருகன்

Water Resources Minister Duraimurugan has informed that the municipal elections will be held by December.

டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சித் தேர்தல் நடைபெறும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் அறிமுகம் கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசின் திட்டங்கள் தொகுதி மக்களுக்கு கிடைக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது, நகரத்தில் இருக்கின்ற திமுக கட்சியினர் எல்லா கிராமத்திற்கும் சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும். ஏனென்றால், டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சித் தேர்தல் வருகிறது என்றும் தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்து தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

நான் அமைச்சராக இருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் கிராமங்களில் ஆக வேண்டிய வேலைகளை பார்ப்பது பஞ்சாயத்து யூனியனில் உள்ளவர்களும், கிராம தலைவர்களும் தான். எனவே, அவர்கள் சரியாக இருந்தால் நாம் கொண்டு வருகிற திட்டம் மக்களை சென்றடையும் என்று குறிப்பிட்டார்.