சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மனோ தங்கராஜுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்பொழுது, இவருக்கு பால்வளத்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது, இது இவர் […]
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். செந்தில் பாலாஜி பதவி விலகிய நிலையில், அவருடைய வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதைப்போல, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே, பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ மனோ தங்கராஜ், தமிழ்நாடு அமைச்சரவையில் […]
சென்னை: சாவர்க்கரின் 5 பெருமைகள் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அண்மையில், மும்பை சென்று அங்கு அண்ணல் அம்பேத்கார் நினைவிடம், சாவர்க்கர் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு சென்று வணங்கினர். அதில், சாவர்க்கர் நினைவிடத்திற்கு சென்றுவிட்டு அவர் பேசுகையில், சாவர்க்கர் துணிச்சலுக்கும், நாட்டின் மீது அசையாத அர்ப்பணிப்புக்கும் அடையாளமாக இருந்தார் என்றும், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், அறிஞர் மற்றும் சிந்தனையாளராகவும் இருந்தார் என்றும், […]
வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பாஜகவினர் பரப்புகின்றனர். உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான். – அமைச்சர் மனோ தங்கராஜ் டிவீட். திமுக பேச்சாளர் சைதை சாதிக் அண்மையில் ஒரு திமுக கூட்டத்தில் பேசுகையில் குஷ்பூ, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் பற்றி சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் […]
அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி. அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. ஆணையம் கூறியது உண்மை. குற்றம் செய்யவில்லை என்றால் இவர்களெல்லாம் எதற்காக பயப்படுகிறார்கள். குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும். ஒரு கட்சி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசியல் என்று பேசுவது அர்த்தம் இல்லாதது. திமுக […]
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைப்பு. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது. இந்தக் குழுவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளர், தனியார் நிறுவன தொழில் அதிபர்களும் குழுவில் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளை பரிந்துரைப்பது போன்றவை இந்த குழுவின் பணிகளாக உள்ளன.
ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இணையதளம் முடங்கியது. விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக எலக்ட்ரீசியன், பிளம்மர், […]