மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ மனோ தங்கராஜ் மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

ManoThangaraj

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். செந்தில் பாலாஜி பதவி விலகிய நிலையில், அவருடைய வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதைப்போல, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் ஏற்கனவே, பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ மனோ தங்கராஜ், தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் அமைச்சராகப் இன்று பதவியேற்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில், 2025-ல் திமுக அரசு மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தில், மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மனோ தங்கராஜ் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அவருக்கு மீண்டும் பால் மற்றும் பால்வளத்துறை அல்லது வேறு முக்கியத் துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,. அதைப்போலவே, அவருக்கு பால்வளத்துறை பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவிற்குப் பின்னர் ஆளுநர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். அதைப்போல, முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

யார் இவர்? 

மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் மிகவும் பிரபலமான  (திமுக) உறுப்பினர் ஆவார். 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன இவர், ஏற்கனவே 2021 முதல் 2023 வரை தமிழ்நாடு அமைச்சரவையில் பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். அவரது பணிகள், குறிப்பாக பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காகவும், ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காகவும் பரவலாகப் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இருப்பினும், 2023-ல் நடந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் அவரது பதவி மாற்றப்பட்டது, இது அவரது ஆதரவாளர்களிடையே சில அதிருப்திகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மீண்டும் அவர் அமைச்சராக பதவியேற்றுள்ளது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்