சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை பனையூரில் காலை 10 மணிக்கு தவெக அலுவலகத்தில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

TVK VIJAY

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான தேர்தல் வியூகங்கள் மற்றும் விஜயின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இந்தக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளும், கட்சியின் எதிர்கால திட்டங்களும் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் குறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையின்படி, மாநில செயற்குழு உறுப்பினர்கள், தலைமைய(patch)யக அலுவலக நிர்வாகிகள், சிறப்பு குழு உறுப்பினர்கள், மண்டல மற்றும் மாவட்ட செயலாளர்கள், மற்றும் கட்சியின் இணைப்பு அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களுக்கு கட்சித் தலைவரால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும். மேலும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி கே.ஜி. அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில், தவெகவின் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. கட்சியின் பூத்-நிலை அமைப்பை வலுப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் விஜயின் மாநில சுற்றுப்பயணத்தின் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

அதே சமயம், இந்த செயற்குழுக் கூட்டம், தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கியமான படியாக கருதப்படுகிறது. கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் பிரிவுகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பிற முக்கிய தலைவர்களின் பங்களிப்புடன், தவெகவின் எதிர்கால உத்திகள் மற்றும் 2026 தேர்தல் தயாரிப்பு இந்தக் கூட்டத்தில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் நடந்து முடிந்த பிறகு கூட்டத்தில் நடந்த விஷயங்கள் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்