நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!
திண்டுக்கல் அரசு கல்லூரியில் பேராசிரியை ஆக பணிபுரிந்து வந்த நிக்கிதா, தன் தாயார் சிவகாமியுடன் சேர்ந்து 2010 முதல் பல பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகிஇருக்கிறது.

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன. 2010-ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினின் உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்ததாக 2011-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தன்னை டாக்டர் என கூறி வந்த அவர், திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட மோசடி புகாரும் மீண்டும் தோண்டப்படும் நிலையில், திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டை பூட்டிவிட்டு தாயாருடன் நிகிதா தலைமறைவாகியுள்ளார்.
தற்போது, கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி வரும் நிகிதா தீவிர பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. அவரது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளார்.
குறிப்பாக, பாஜக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக, அவரைப் பாராட்டி பல்வேறு பதிவுகள் வெளியிட்டுள்ளார். அது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, திருமண மோசடி என இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன நிலையில், பாஜக பின்புலத்தை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஊர் ஊராக சுற்றி வருவதாக தெரிகிறது. தற்போது பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீ கடை ஒன்றில் நிகிதா தனது தாயார் மற்றும் கார் ஓட்டுநருடன் இருந்துள்ளார். இதை கண்ட ஒருவர் தனது செல்போன் மூலம் காட்சியை பதிவு செய்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வழக்குகளின் விவரம்:
- ராஜாங்கம் என்பவரிடம் ரூ.11 லட்சம் மோசடி.
- தெய்வம் என்பவரிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம் மோசடி.
- வினோத் குமாருக்கு VAO வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி.
- அதேபோல் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாக மேலும் 2 வழக்குகள் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025