இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 355 ரன்கள் சேர்த்துள்ளது.

Harry Brook and Jamie Smith partnership

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால் (269) இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்துள்ளது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து முதலில் தடுமாறினாலும், ஸ்மித் மற்றும் புரூக் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஒரு தலைவலியாக மாறிவிட்டனர்.

ஆம்,  ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் இடையே 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் உள்ளது. இருவரும் அற்புதமாக பேட்டிங் செய்கிறார்கள்.  இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நேற்றைய தினம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணிக்காக, தொடக்க வீரர் ஜாக் க்ரௌலி 19 ரன்களும், பென் டக்கெட், ஒலி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பூஜ்ஜிய ரன்களிலும் ஆட்டமிழந்தனர், ஜோ ரூட் 22 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாளான இன்று மதிய உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து 5 விக்கெட்டுகளுக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாளான இன்று போட்டி துவங்கிய போது, முதலில் பேட்டிங் செய்ய வந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. ஆனால் , அதன் பிறகு ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் வேகமாக பேட்டிங் செய்து 270 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் செய்துள்ளனர்.

ஸ்பின், வேகம் எதுவும் இந்தியாவுக்கு கைகொடுக்கவில்லை. நிதானமாக விளையாடி, ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார், அதே நேரத்தில் புரூக் 102 பந்துகளில் சதம் அடித்தார். முதலில் சததத்தை பதிவு செய்த ஜேமி ஸ்மித்துக்குப் பிறகு, ஹாரி புரூக்கும் தனது சதத்தை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இங்கிலாந்து வீரர்களின் சாதனை பட்டியலில் ஜேமி சுமித் இணைந்தார்.

ஆகாஷ்தீப் இரண்டு விக்கெட்டுகளையும், சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். தேநீர் இடைவேளை வரை, இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்துள்ளது. ஃபாலோ-ஆனை காப்பாற்ற இங்கிலாந்து இப்போது 33 ரன்கள் மட்டுமே தேவை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்