முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

விஜய் சேதுபதி மகன் சூரியா சேதுபதி நடித்த ஃபீனிக்ஸ் படம் பார்த்த விஜய் படம் நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.

ThalapathyVijay watch Phoenix

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து, அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தக் காட்சியில், சூர்யாவின் நடிப்பையும் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளையும் விஜய் மனதார புகழ்ந்தார். “முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா!” என்று சூர்யாவை வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனல் அரசு இயக்கத்தில் வெளியாகிய இந்தப் படம், சூர்யாவின் ஆக்‌ஷன் அவதாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்தப் பாராட்டு, படத்திற்கு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக ஊடகங்களில் ரசிகர்கள், சூர்யாவை ‘கோலிவுட் ப்ரூஸ் லீ’ என்று வர்ணித்து, அவரது ஆக்‌ஷன் காட்சிகளை வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர்.

‘ஃபீனிக்ஸ்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பே, அதன் விளம்பர நிகழ்ச்சிகளும், டிரெய்லரும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன. விஜய் சேதுபதி, தனது மகனின் முதல் படம் குறித்து பெருமையும் மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தார். முதல் படத்திலே விஜயிடம் விஜய் சேதுபதி மகன் பாராட்டு வாங்கியது சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாராட்டு, சூர்யாவின் திரையுலக பயணத்தில் ஒரு முக்கிய தருணமாக அமைந்துள்ளது.

விஜய்யின் வாழ்த்து, படத்தின் வெற்றிக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விஜய் பாராட்டியது குறித்து சூர்யா சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கங்களில் ” படத்தை பார்த்துவிட்டு விஜய் சார் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மிகவும் ரசித்த ஒருவரிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டை பற்றி உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உங்களின் கனிவான வார்த்தைகளும், அணைப்பும், எல்லாவற்றையும் உணர்த்தியது” எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்