Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல் பத்மபூஷன் விருது பெற்ற அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்என பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, அடுத்த நாளில் வேளாண் நிதி நிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அஜித்குமார் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. இவருக்கு தற்பொழுது, பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.