சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, அடுத்த நாளில் வேளாண் நிதி நிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய […]
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட முன் வடிவை பேரவையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்கிறார். உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார். மேலும், டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் பத்மபூஷன் விருதை பெறுகிறார் நடிகரும் ரேஸருமான அஜித்குமார். சினிமா, கார் ரேஸ் என இரட்டைக் […]
சென்னை : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடிகர் அஜித், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது (ஜனவரி 26) இந்த விருதை அறிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில், நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டைச் […]
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டது குறித்து அஜித்குமாரன் நன்றி தெரிவிக்கும் வகையில், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அஜித் கூறியதாவது ” இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். […]