MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. பிளேஆஃப் செல்வதை இன்றைய போட்டி தீர்மானிக்கும் என்பதால், இரு அணிகளுமே வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும்.
தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ்:
கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான அணியில், அபிஷேக் போரல், சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முஸ்தபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்:
கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில், ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஹார்டிக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி வெற்றி பெற்றால், பிளேஆஃப்களுக்குள் நுழையும். ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி 12 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல், டெல்லி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில், அக்சர் படேல் தலைமையிலான டிசி, பிளேஆஃப்களுக்குச் செல்ல மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். டெல்லி அணி 12 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி கடந்த நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இன்று நடைபெறும் போட்டியை தொடர்ந்து, இரு அணிகளும் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக விளையாட வேண்டும். நடப்பு சீசனின் தற்போது நடைபெறவுள்ள போட்டி மிகவும் முக்கியமானது. ஆனால், மும்பையில் இன்று 4 மணிநேரம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், 2 அணியின் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025