ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

ரெய்டை பார்த்து யாருக்கும் பயம்? என்று மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்துள்ளார்.

mk stalin -edappadi palanisamy

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் மே 24 அன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக்கூட்டத்தில் வெளிப்படுத்தவே வரும் 24ம் தேதி டெல்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

”பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?” என முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் கொடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, CM இன்று டெல்லி செல்வது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அறிவாலயத்தில் CBI ரெய்டு வந்தவுடன், 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், டாஸ்மாக்கில் ‘அந்த தம்பி’ அடித்த கொள்ளையில் உங்கள் குடும்பத்திற்கு பங்கு இருக்கிறதா என்பது தெரியவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எது உங்கள் கை?

அண்ணா பல்கலை.. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர். சுயவிபரங்களுடன் FIR லீக் செய்த ஸ்டாலினின் கை. ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை. ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும்”SIR”களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.

அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில். உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை. தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை” என விமர்சனம் செய்த்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்