சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ், அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2023 ஜனவரியில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் 982 பக்க அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார். […]