சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார். பாராலிம்பிக்கில் தொடரில் கலந்து கொண்டு வெள்ளி மட்டும் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, மணிஷா, நித்யஸ்ரீ உள்ளிட்டோருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். இதுவரை இல்லாத அளவிற்கு பாராலிம்பிக் தொடரில் இந்த ஆண்டு இந்திய அணி 29 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தது. அதில், 7 தங்கப்பதக்கமும், 9 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 13 […]
TNPSC : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் 2327 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வான குரூப் 2 மற்றும் குரூப் 2 A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். குரூப் 2 தேர்வில் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ம் தேதி வெளியானது. எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுவரை […]
தமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி […]
தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூத்துக்குடி, திருநெல்வேலி […]
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.08) விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. மழை பாதிப்பு எதிரொலியாக சென்னையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரண மற்றும் மீட்பு பணிகள் சில இடங்களில் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5-ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு […]
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் பயன்பெறும் […]
புதிய ரேசன் ஸ்மார்ட் அட்டைக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய ரேசன் அட்டை கோரி மே மாதம் முதல் செப்.26 ஆம் தேதி வரை கடந்த 5 மாதத்தில் 10 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து,விண்ணப்பித்தவர்களில் 93% பேருக்கு புதிய ரேசன் அட்டை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது,10 லட்சம் விண்ணப்பங்களில் 7.28 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும்.2.61 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் […]
மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதெல்லாம் மாநில அரசின் கடமை: “சாலைகளின் இருமருங்கிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும், அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும் மாநில […]
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 90 ஐ விட குறைவாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணத்தால் தமிழக முதல்வர் ஊரடங்கை அறிவித்திருந்தார். இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவு […]
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணத்தால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதியாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இதற்கு முதலில் கையெழுத்திட்டார். அதில் இம்மாதமே முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, தினமும் 200 […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என்று பலரும் வேலை பார்த்து வருகின்றனர். இதில், இளம் மருத்துவர்களின் இழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பணியில் ஈடுபட்டு இறக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவதை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதை குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. கொரோனா பணியில் ஈடுபட்டு கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், […]
வீடு இல்லாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் ஆயுதமாக தடுப்பூசி தற்போது செயல்பட்டு வருகிறது. அதனால் தடுப்பூசியை போடுவதில் மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வீடு இல்லாதவர்களும் இந்த கொரோனா பாதிப்பில் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை […]
ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்பட்டதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மனு: இதற்கிடையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் […]
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அக் 31ந்தேதி காலமானார்.மறைந்த அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மறைவைத் அடுத்து அத்தொகுதி தொகுதி காலியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிட்டுள்ளார். சபநாயகரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இதனுடன் 4 தொகுதிகள் காலியாக உள்ளது விவரங்கள்:-கடந்த பிப்ரவரி மாதம் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, மற்றும் குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர். […]
தமிழகத்தில் முதற்கட்டமாக 30 ஆந்திர மாநிலத்தவர்கள், 20 கேரளத்தவர்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கபட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுதும் கடந்த 4ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட மற்ற இடங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. தமிழக போக்குவரத்து கழகத்திடம் 1082 சொகுசு பேருந்துகள் உள்ளன. இதில், சிலவற்றின் மூலம் மட்டும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், அரசு அதிகாரிகளை மட்டும் அழைத்து வர பயன்படுத்தப்பட்டு […]
சென்னை : தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் குமரி, தூத்துக்குடி, நாகை மற்றும் கடலூரை சேர்ந்த 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல் ஒக்கி புயலால் மாயமான 177 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மாணவ ,மாணவிகளை காப்பாற்றிய குரங்கணியைச் சேர்ந்த மரக்காமலை, காமராஜ், பாக்கியராஜ், சங்கர் ஆகியோருக்கும் அந்த கிராமத்து மக்களுக்கும் வீரச்செயலுக்கான விருதுகளை வழங்க என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) சார்பில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மாநிலச்செயலாளர் P.சண்முகம் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
3 ஆண்டுகளுக்குப்பின், 12ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும். தனியார் பள்ளியில் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகையைவிட அதிகளவு அரசு பள்ளி மாணவருக்கு தமிழக அரசு செலவு செய்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்படும் எனவும் அதேபோல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்த விரைவில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்
உங்கள் வீட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்றும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்கள். இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. எனினும் அது மீண்டும் தலை தூக்காமல் இருக்க இந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் தொடரவேண்டியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தென்குழி என்னும் கடற்கரை கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தின் போது வரும் கடல் மண் அரிப்பை தடுக்கும் எண்ணத்தில் தமிழக அரசால் சுமார் 8 கோடி மதிப்பிட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.