மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 4 வயது சிறுமி ஆருத்ரா பள்ளி வளாகத்தில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி தாளாளர் திவ்யாவை கைது செய்தனர். மேலும், 6 […]
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை பயின்று வந்துள்ளது. இக்குழந்தை இன்று பள்ளியில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருக்கும் போது பள்ளி வளாகத்தில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் தவறுதலாக விழுந்துவிட்டது. உடனடியாக அக்குழந்தை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஆருத்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை அடுத்து காவல்துறையினர் பள்ளி தாளாளர் திவ்யா பத்ரி […]
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4 வயது பெண் குழந்தை பயின்று வருகிறார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த குழந்தை, தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி ஆருத்ரா தவறி விழுந்துள்ளார் எனத் தெரிகிறது. தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமியை உடனடியாக மீட்டு பள்ளி நிர்வாகத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு […]
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்-மே) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று (ஏப்ரல் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று காலை 9:55 முதல் 10:19 மணிக்குள், சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரம் […]
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தமிழக சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பயணிகளை பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டனர். அதன்படி, தமிழக அரசின் உதவியோடு, ஜம்மு காஷ்மீரில் இருந்து விமானம் மூலம், 68 சுற்றுலா பயணிகள் இன்று சென்னை வந்தடைந்தனர். சுற்றுலாப் […]
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை அடுத்து காஷ்மீரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நேற்று (புதன்கிழமை) ஸ்ரீநகரில் இருந்து 7 கூடுதல் விமானங்களை […]
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8, 2025 அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழாவில் உணவு, நீர், மோர் வழங்க அனுமதிச்சான்று பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட […]
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8, 2025 அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. திருக்கல்யாண நிகழ்வை நேரில் காண விரும்புவோர் இணையதளம் வழியாக கட்டணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெறுவது தொடர்பாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ.200, ரூ.500 மற்றும் கட்டணமில்லா தரிசன […]
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற் போலவே மத்திய அரசின் சில செயல்பாடுகளும் அரங்கேறி வருகின்றன. அப்படியொரு நிகழ்வை சுட்டிக்காட்டி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது கண்டன பதிவை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் குறிப்பிட்ட பதிவில் கேரள மாநில கல்வியமைச்சர் வி.சிவன்குட்டி இந்தி திணிப்பு பற்றிய கூறிய கண்டனம் பற்றிய செய்தித்தாளை […]
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கோவைக்கு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடத்த தனது ஆதரவாளர்களுடன் பயங்கர ஆயுதங்களுடன் வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும், இதனால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைபட்டால், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை சுட்டு பிடிக்க வேண்டும் என கோவை போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின . தன்னை கோவை […]
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று “கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், மதுரை எம்பி சு.வெங்கடேசன் என பல்வேறு அரசியல் […]
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அடுத்து பாஜக மாநில நிர்வாகிகளின் டெல்லி பயணம், அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பயணம் என அதிமுக அரசியல் களம் பரபரக்கிறது. அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா, தினகரனை சேர்க்க இபிஎஸ் தயங்குகிறார். அதனால் தற்போது அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் மூலமாக […]
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முதலமைச்சர் ஆட்சியில் இருந்தும் மத நல்லிணக்க மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அறவழிப் போராட்டம் என்பது அரசியல் அடையாளங்களில் ஒன்று. அதுவும் மதநல்லிணக்கம் பேண வலியுறுத்தும் பேரணியை எந்தக் […]
சென்னை : நேற்று (பிப்ரவரி 10) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு நலத்திட்டங்கள், தமிழக பட்ஜெட் ஆகியவை விவாதிக்கப்பட்டன என கூறப்பட்டது. இதுகுறித்து முக்கிய தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதாக […]
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை முதல் 16ம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12ஆம் தேதி புதன்கிழமை மதுரை கிழக்கு, மதுரை கீழக்கு வடக்கு. கிழக்கு தெற்கு ஒன்றியங்கள் மற்றும் வண்டியூர் பகுதிகளுக்கான ஜல்லிக்கட்டு விழா என தனித்தனியே நடைபெறுகிறது. […]
சென்னை : மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோயில் (முருகன் கோயில்) உள்ளது. இங்கு கோயில் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அந்த கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி வருகிறது. இதனால், பக்தர்கள், அர்ச்சகர்களின் தட்டில் வழங்கும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை பொருட்டு, கடந்த 7ஆம் தேதி கோயில் […]
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது தான் பெரும்பாலான தவெக மாவட்ட செயலாளர்கள் பதவிகளை நிரப்பி வருகிறார். இன்னும் சில மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் நியமனம், அடுத்து வட்டம், நகரம், ஒன்றிய பொறுப்புகள் என உட்கட்சியை பலப்படுத்தி வருகிறார். அதே நேரம், மாநாடு, புத்தக வெளியீடு நிகழ்ச்சியை தவிர்த்து அண்மையில் தான் பரந்தூர் மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்தித்தார் தவெக தலைவர் […]
சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா எனும் இஸ்லாமிய வழிபாட்டு தலமும் உள்ளது. இதில் சிக்கந்தர் பாதுஷா தர்காவில், ஜனவரி 18 அன்று ஆடு, கோழி பலியுடன் கந்தூரி நிகழ்வு நடைபெறவிருந்தது. ஆனால், திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழிகளை பலியிட அனுமதிஇல்லை என மதுரை மாவட்ட காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஆடு கோழிகளை பலியிட கூடாது என இந்து அமைப்பினரும் போர்க்கொடி […]
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா எனும் இஸ்லாமிய வழிபாட்டு தலமும் உள்ளது. இதில், சிக்கந்தர் பாதுஷா தர்காவில் இந்த வருட தொடக்கத்தில் சந்தனக்கூடு திருவிழா முடிந்ததும், அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 18ஆம் தேதி ஆடு, கோழிகளை பலியிடும் கந்தூரி நிகழ்வு நடைபெறபோவதாக இஸ்லாமியர்கள் அறிவித்தனர். இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழிகளை பலியிட அனுமதிஇல்லை என மதுரை மாவட்ட காவல்துறையினர் […]
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 முதல் 6 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வழிபாட்டு மையமான சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வழக்கம்போல் கந்தூரி நிகழ்வு நடைபெறுவதை எதிர்த்து, இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்த முன் […]