சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

வைகை ஆற்றில் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கான நிவாரணம் வழங்குவோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருக்கிறார்.

ChithiraiThiruvizha

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்வித்து, விண்ணை முட்டும் ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இந்த கூட்டத்தில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் பக்தர் ஒருவர் மயங்கி விழந்து உயிரிழந்தார்.

நெல்லையை சேர்ந்த அவர் (பூமிநாதன்) மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ”சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்பு நேர்ந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழாவில் அளவுக்கடங்காத, கட்டுக்கடங்காத கூட்டம். பால வேலைகள் நடப்பதால் சாலைகள் முறையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இப்பொது, உயிரிழந்தவர்கள் குறித்து தகவல்களை சேகரித்து வருகிறோம் என்றும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்