உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Madurai Highcourt

மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின்  9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் (பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்றவை) காலியாக உள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தது.

ஆனால், இந்த இடைத்தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாமல் இடைத்தேர்தல் நடத்தப்படுவது சட்டவிரோதமானது என்று வாதிடப்பட்டது.

இந்த நிலையில், காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உள்ளாட்சித் தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை ‘புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் நடத்த வேண்டும்’ எனவும் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்