உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!
எங்க கொள்கைக்கும் அவங்களுக்கும் 1,000 கி.மீ தூரமிருக்கு என த.வெ.க குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்களை கேள்விகளை எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் ” அவருடைய கட்சி என்றால் அவர் தானே வேட்பாளராக இருப்பார். அவர்கள் சரியாக தான் சொல்கிறார்கள் மும்முனை போட்டி என்று. ஏனென்றால், எங்களுடைய கொள்கைகளுக்கு அவர்களுடைய கொள்கைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா?
மொழி என்று இந்த கட்சி பேசுமா? மொழி வாழிபாடு என இந்த கட்சி எதுவும் பேசியிருக்கிறதா? இது என் மண்வளம் மக்களுக்கான வளம் என்று பேசுமா? மண்ணை அல்லாத என் தாயினுடைய நதி என்று பேசுமா? என இதை பற்றி எதாவது இந்த கட்சி பேசுமா? அவுங்க கட்சி வேற வாக்குக்கு காசு கொடுப்பாங்க நான் மக்களுடைய வாழ்க்கைக்காக கவலைப்படுவோம்.
நாங்கள் நாட்டை பற்றி சிந்திப்போம் எனவே எங்களுக்கு அவர்களுடைய கொள்கைக்கும் 1,000 கி.மீ தூரமிருக்கு எனவே அவுங்க மூன்று பேருக்கும்போட்டி எங்களுக்கு எப்போதும் போட்டியே கிடையாது. உலக தமிழக வரலாற்றில் 4 முறை தோல்வியடைந்து துவளாமல் ஐந்தாவது முறையாக போட்டியிடுவது நாங்கள் தான்” எனவும் சீமான் பேசினார்.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் கொள்கை தூரம் குறித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நீங்கள் பெரியார் கொள்கை வழிகாட்டி என்று சொல்கிறீர்கள். நாங்கள் பிரபாகரன் கொள்கை வழிகாட்டி என்று கூறுகிறோம். எனவே, எங்களுடைய கொள்கைக்கும் உங்களுக்கு ஓராயிரம் தூரம் இருக்கிறது. பெரியாரை எந்த கொள்கை ரீதியாக ஏற்கிறீர்கள் என்றால் அது பற்றி தெளிவாக கூறவேண்டும். தமிழை காட்டிமிராண்டி என்று பெரியார் சொன்னதை இவர்கள் ஏற்கிறார்களா? தமிழை விட்டு ஒழியுங்கள் என்று சொன்னதை ஏற்கிறார்களா? இதற்கெல்லாம் பதில் இருக்கிறதா? எனவும் சீமான் கேள்வி எழுப்பினார்.