சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். இந்த சந்திப்பு சிறையில் நடந்த காவலர்களின் அத்துமீறல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நாம் தமிழர் கட்சியின் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது. சந்திப்பின்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சீமான், இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று […]
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்களை கேள்விகளை எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் ” அவருடைய கட்சி என்றால் அவர் தானே வேட்பாளராக இருப்பார். அவர்கள் சரியாக தான் சொல்கிறார்கள் மும்முனை போட்டி என்று. ஏனென்றால், எங்களுடைய கொள்கைகளுக்கு அவர்களுடைய கொள்கைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, அதன் நிறுவனர் விஜயை கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதனை தொடர்ந்து, பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்க வேண்டும் எனவும் விஜய் […]
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரமும் விஜய்க்கு அளிக்கப்படுவதாகவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு நடைபெறும் என்றும், அகக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 20 தீர்மானங்கள் ஏற்றி மாநிலச் செயற்குழுக் கூட்டம் முடிவு பெற்றது. […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர், இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. இந்த செயற்குழு கூட்டத்தில் 120 மாவட்டங்கள் மற்றும் 12,500 கிராமங்களில் தவெகவின் கொள்கைகளை விளக்கும் பிரசாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணத்திற்கு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு ஒரு சில மேடை நிகழ்வுகளில் கலந்து கொண்டதை அடுத்து முதல் முறையாக நேற்று முன்தினம் பரந்தூர் சென்று அங்குள்ள மக்களை நேரடியாக களத்தில் சந்தித்தார். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 13 கிராம மக்களை மேல்பொடவூர் எனும் கிராமத்தில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் தவெக தலைவர் விஜய் […]
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதுவிமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலாதுறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும், நலன்களும் எந்தவகையிலும் […]
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போரட்டத்தில் ஈடுபடும் மக்களை நேற்று த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது பேசிய விஜய் ” ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் சொல்வது என்னவென்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. விமான நிலையம் வரக்கூடாது என்று […]
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நாளை அப்பகுதிக்கு வருகிறார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. பரந்தூர் […]
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க அவர் செல்ல திட்டமிட்டிருந்தார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அங்கிருக்கும் கிராமத்தினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும், […]