சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். இந்த சந்திப்பு சிறையில் நடந்த காவலர்களின் அத்துமீறல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நாம் தமிழர் கட்சியின் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது. சந்திப்பின்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சீமான், இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று […]
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்களை கேள்விகளை எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் ” அவருடைய கட்சி என்றால் அவர் தானே வேட்பாளராக இருப்பார். அவர்கள் சரியாக தான் சொல்கிறார்கள் மும்முனை போட்டி என்று. ஏனென்றால், எங்களுடைய கொள்கைகளுக்கு அவர்களுடைய கொள்கைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? […]
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, ஜூலை 8, 2025 அன்று சென்னையில் நடைபெற உள்ள பயிற்சிப் பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த இரு நிர்வாகிகளை மடிக்கணினியுடன் அழைத்து வர வேண்டும் என்று கட்சி […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, அதன் நிறுவனர் விஜயை கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதனை தொடர்ந்து, பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்க வேண்டும் எனவும் விஜய் […]
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரமும் விஜய்க்கு அளிக்கப்படுவதாகவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு நடைபெறும் என்றும், அகக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 20 தீர்மானங்கள் ஏற்றி மாநிலச் செயற்குழுக் கூட்டம் முடிவு பெற்றது. […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர், இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. இந்த செயற்குழு கூட்டத்தில் 120 மாவட்டங்கள் மற்றும் 12,500 கிராமங்களில் தவெகவின் கொள்கைகளை விளக்கும் பிரசாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணத்திற்கு […]
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்கும் என சென்னையில் நடந்த மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவின் நிர்வாகிகள் திமுகவில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மதிமுகவின் தலைவர் வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் […]
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிதாக பதிவு செய்தல், அல்லது இதர திருத்தங்களுக்கு விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு, வாக்காளர்களுக்கு சேவைகளை எளிமையாக்கவும், தாமதங்களை குறைக்கவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிமுறைகளின் கீழ், விண்ணப்பங்கள் ஆன்லைனில் (https://voters.eci.gov.in/ அல்லது […]
சென்னை : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற கேள்விகளும் எழும்பத்தொடங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக பெரிய அளவில் பேசப்பட்டு வருவது என்றால் பாஜக – அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக இருக்கும் தகவல் தான். இது குறித்து இரண்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் தகவல்கள் தீயாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இன்னும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. கூட்டணி குறித்து கேள்விகேட்கப்பட்டாலும் இரண்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டணி பற்றி நேரம் வரும்போது சொல்வோம் என தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி பற்றியும்…பாஜக பற்றியும் சில […]
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது. இதை பார்த்து அதிமுக கலகலத்து போயுள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்த அவர், பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் […]
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது இந்த தகவலை மேலும் வலுப்படுத்தியது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை என பல்வேறு யூகங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் […]
சென்னை : தவெகவின் புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமனம் செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் சந்திக்கும் நிகழ்வு பனையூரில் இன்று (24.01.2025) காலை நடைபெற்றது. அப்பொழுது, தவெக தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார். இதனிடையே, தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய ஆலோசனையின் போது, புஸ்ஸி ஆனந்த் வெளியேற்றப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், நடந்து முடிந்த ஆலோசனையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் […]
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, மேடையில் பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை, இந்தியாவுக்கான வெற்றி. 200 இல்லை, 200க்கும் மேல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்றார். […]
சென்னை : சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பை முடித்துவிட்டு, இன்று (டிச.1) நாடு (தமிழகம்) திரும்பியுள்ளார். இந்நிலையில், மூன்று மாதத்திற்கு பின்னர் தமிழகம் திரும்பிய அண்ணாமலையை சென்னை விமான நிலையத்தில், ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் எழுப்பி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய பின், முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம், விஜய் அரசியல் வருகை குறித்து […]
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். சமீபத்தில், நாகப்பட்டினம் அல்லது தூத்துக்குடி தொகுதியில் விஜய் போட்டியடுவார் என தகவல் வெளியானது. பின்னர், விக்கிரவாண்டி அல்லது நாகை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. இப்படி அவ்வப்போது, விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் […]