பாஜக கூட்டணி வேணும் என தவம் கிடக்கிறார்கள்! அண்ணாமலை பேச்சு!
கூட்டணி குறித்து பேசவேண்டிய நேரம் வரும்போது பேசுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இன்னும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. கூட்டணி குறித்து கேள்விகேட்கப்பட்டாலும் இரண்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டணி பற்றி நேரம் வரும்போது சொல்வோம் என தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி பற்றியும்…பாஜக பற்றியும் சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் தொடங்கி வைத்த மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தானாக வந்து கையெப்பமிடுகிறார்கள். மற்றபடிநாங்களே பேனாவை எடுத்து கையில் கொடுத்து கையெழுத்து போட சொல்லவில்லை” என விளக்கம் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து பாஜக குறித்து பேசிய அவர் ” பாஜக மட்டும் இல்லை என்றால் தமிழக அரசியல் இல்லை என்ற சுழலலை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். பாஜக கட்சி..நோட்டா கட்சி..கூட்டணியால் தோல்வி அடைந்தோம் என்று பேசியவர்கள் கூட இன்று பாஜக கூட்டணி வேண்டும் என தவம் கிடக்கிறார்கள். இதனை நான் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள மிகவும் பெருமைப்படுகிறேன். மற்றபடி நான் எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை. இன்னைக்கு எங்களுடைய கட்சியின் தொண்டர்கள் அந்த அளவுக்கு உழைத்ததை நினைத்து பெருமைபடுகிறேன்.
ஏற்கனவே சொன்னது போல எந்த கட்சியுடன் கூட்டணி? தேசிய ஜனநாயக கூட்டணி என்பது எப்படி இருக்கும்? அதில் முக்கிய கட்சியாக யார் இருக்கும்? யார் தலைவர் யார் தலைவர் இல்லை யார் முதலமைச்சர் என்பது எல்லாம் பேசவேண்டிய நேரத்தில் நிச்சயமாக பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை எங்களுடைய நோக்கமே பாஜகவை நிலைநிறுத்த வேண்டும் என்பது தான்.
கடந்த ஐந்து வருடங்களாக வந்த செய்திகளை எடுத்து பார்த்தீர்கள் என்றால் பாஜகவால் தோற்றோம்..பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தோற்றுவிடுவோம் என பேசினார்கள். அதே தலைவர்கள் இப்போது எப்படி பேசுகிறார்கள் என்று இப்போது எடுத்து பாருங்கள். எனவே, தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள் சரியான நேரத்தில் நிச்சயமாக நாங்கள் கூட்டணி குறித்து பேசுவோம். மக்கள் கொடுத்த ஆதரவின் படி தான் ஒவ்வொரு இடங்களிலும் ஆட்சி செய்து வருகிறோம்” எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025