”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை, பாஜகவின் விஷமத்தனமான வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது என்று தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

TVK - meeting

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர், இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படன.

இந்த செயற்குழு கூட்டத்தில் 120 மாவட்டங்கள் மற்றும் 12,500 கிராமங்களில் தவெகவின் கொள்கைகளை விளக்கும் பிரசாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன், மாநில மாநாட்டை நடத்த வேண்டும் என தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு தெருவிலும் 10 பேர் வரை தவெக நிர்வாகியாக இருக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

பின்னர், மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், ” தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ அல்லது தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்தோ அரசியல் செய்ய நினைத்தால், அதில் பாஜக ஒருபோதும் வெற்ற பெற இயலாது. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழைந்து கூட்டணிக்கு போக நாம் திமுக, அதிமுகவோ இல்லை, நாம் தமிழக வெற்றிக் கழகம்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்